சியோமியின் "Mi Band 4", புதிய அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்வாட்சில் என்னவெல்லாம் உள்ளது?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
சியோமியின்

முன்னதாக இந்தியாவில் அறிமுகமான "Mi Band 3"

ஹைலைட்ஸ்
  • "Mi Band 4"-ஐ ஜூன் 11 தேதியன்று சீனாவில் அறிமுகமாகிறது
  • "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச் கலர் OLED திரையை கொண்டிருக்கலாம்
  • ஹார்ட் ரேட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

சியோமி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்வாட்சான "Mi Band 4"-ஐ ஜூன் 11 தேதியன்று சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை தனது வெய்போ பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் உறுதி செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த "Mi Band 4", முன்னதாகவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியான "Mi Band 3"-ன் அடுத்த மாடலாக இருக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ,சியோமியின் இந்த "Mi Band 3" 10 லட்சம் விற்பனை எண்ணிக்கையை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அறிமுகமாகவுள்ள இந்த "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச் கலர் டிஸ்ப்லே, ஹார்ட் ரேட் சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச் குறித்த அறிவிப்பை சியோமியின் மிஜியா நிறுவனம் தனது வெய்போ பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பதிவின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் வருகின்ற ஜூன் 11-ஆம் தேதியன்று அறிமுகமாகவுள்ளது. மேலும் அந்த பதிவில் வெளியிடப்பட்ட டீசரின் வாயிலாக இந்த ஸ்மார்ட்வாட்ச் கலர் டிஸ்ப்லே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

xiaomi mi band 4 weibo Xiaomi Mi Band 4

முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றி வெளியான தகவலின்படி, இந்த  "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச் கலர் OLED திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்  "Mi Band 3"-யின் திரையை விட பெரிய திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முந்தைய ஸ்மார்ட்வாட்சை விட அதிகரித்த பேட்டரி அளவை கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்சில் ஹார்ட் ரேட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகாத நிலையில், சீனாவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 199 சீன யுவான்களாக (1,994 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவில் வெளியான "Mi Band 3", 1,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.