அறிமுகமானது சவுண்ட் ஓன் நிறுவனத்தின் 'டிரம்' ஸ்பீக்கர்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அறிமுகமானது சவுண்ட் ஓன் நிறுவனத்தின் 'டிரம்' ஸ்பீக்கர்!

IPX5 சான்றிதழை சவுண்ட் ஓன் டிரம் ஸ்பீக்கர் பெற்றுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஆன்லையின் மற்றும் ஆஃப்லையின் கடைகளில் விற்பனையாகும் சவுண்ட் ஓன்!
  • 10 W அவுட் புட் வசதியை கொண்டுள்ளது.
  • சவுண்ட் ஓன் டிரம் ஸ்பீக்கர் IPX5 சான்றிதழை பெற்றுள்ளது.

பட்ஜட் ஆடியோ நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில் தற்போது சவுண்ட ஓன் நிறுவனம் தனது 'டிரம்' போர்டபுள் வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. 

இந்தியாவில் ரூ.3,490க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த போர்டபிள் ஸ்பீக்கர், ஆன்லையின் தளங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆச்சரியமாக அமேசானில் இந்த ஸ்பீக்கர் தற்போது 1,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

4.2 புளூடூத் கனெக்டிவிட்டியை கொண்ட இந்த சவுண்ட் 'டிரம்' தூசி மற்றும் தண்ணீர் புகாமல் இருக்கும் என்பதற்கான IPX5 சான்றிதழை பெற்றுள்ளது. 10W சவுண்டை வெளியேற்றும் ஸ்பீக்கர்களை  கொண்ட இந்த 'டிரம்' முக்கிய வசதியாக மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் பாடல்களை பிளே செய்யும் வசதியை கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்பீக்கரில் மைக் வசதி இடம்பெற்றுள்ளதால் வாயிஸ் கால்களை எளிதில் பேச முடிகிறது. 2,000mAh பேட்டரி வசதி கொண்ட இந்த ஸ்பீக்கர், ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 8 மணிநேரம் வரை சார்ஜ் தாங்குகிறது. 

தனது கன்ட்ரோல் பட்டன்கள் அனைத்தும் ஸ்பீக்கரின் மேல் அமைந்திருக்கும் நிலையில் இதல் பொருத்தப்பட்டிருக்கும் ஃபேபிரிக்  போனை எளிதில் எடுத்து செல்ல உதவுகிறது. 649 கிராம் எடைகொண்ட இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் 3.5mm நீளமுள்ள கேபிள் மற்றும் யுஎஸ்பி வசதியை கொண்டுள்ளது. 

ரூ.1,890க்கு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட X60 என்னும் வயர்லெஸ் இயர்போன்ஸ் இன்னும் விற்பனையில் உள்ள நிலையில் அந்த இயர்போன்சும் நெக்பேண்ட் டிசைனை கொண்டுள்ளது. மேலும் சவுண்ட் ஓன் டிரம் ஸ்பீக்கர்களில் உள்ள IPX5 சான்றிதழை இந்த இயர்போன்சும் பெற்றுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.