இந்தியாவில் அறிமுகமான WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் அறிமுகமான WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள்!
ஹைலைட்ஸ்
 • WI-C310, WI-C200 சோனி ப்ளூடுத் இயர்போன்கள் எடை வெரும் 15 கிராம் மட்டுமே
 • இந்த இயர்போன்களை சார்ஜ் செய்ய டைப்-C சார்ஜ்ர் போர்ட் வழங்கப்பட்டுள்ளது
 • அமேசானில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இயர்போன்கள்

இந்தியாவில் வளர்ந்துவரும் தன் நிறுவனத்தின் இயர்போன்கள் வரிசையில், இன்னும் இரண்டு இயர்போன்களின் பெயர்களை இணைத்துள்ளது சோனி நிறுவனம். WI-C310 மற்றும் WI-C200 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த இரண்டு இயர்போன்கள் அட்டகாசமான திறன்களை கொண்டிருக்கும் என சோனி நிறுவனம் கூறியுள்ளது. இந்த இயர்போன்கள் சிறப்பான தெளிவுடன், டீப் பேஸ் (Deep Bass) கொண்டுள்ளது என கூறியுள்ளது சோனி நிறுவனம். இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள சோனி நிறுவனத்தின் கடைகளிலும் மற்றும் மிக்கியமான மின்னணு கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஹெட்போன்களின் விலை, அம்சங்கள் உள்ளே!

சோனியின் WI-C310 மற்றும் WI-C200 ஆகிய இரண்டு ப்ளூடுத் இயர்போன்களுமே எடை குறைவானவை. இவற்றின் எடை வெரும் 15 கிராம் மட்டுமே. இரண்டு இயர்போன்களுமே 15 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டு இயர்போன்களும் அதிவேக சார்ஜர் வசதி கொண்டுள்ளது. இதன் அதிவேக சார்ஜரின் திறன் எப்படியானது என்றால், இந்த இயர்போன்களை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 60 நிமிடம் வரை உபயோகிக்கலாம். இந்த இயர்போன்களை சார்ஜ் செய்ய டைப்-C சார்ஜ்ர் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

முன்று பட்டன்களை கொண்டுள்ள இந்த இயர்போன்களின் நடு பட்டன், நெரடியாக கூகுள் அசிஸ்டன்ட், சிரியுடன் இணைத்துகொள்ளவும், தொலபேசி அழைப்புகளை எடுக்கவும் என பலதிறன் கொண்டதாக அமைந்துள்ளது.

அமேசானில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இயர்போன்கள், சோனி WI-C310 இயர்போன் 2,990 ரூபாயிலும், சோனி WI-C200 இயர்போன் 2,490 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. Redmi Note 8 ஸ்மார்ட்போன்கள், ஒரு நாளில் 1 மில்லியன் முன்பதிவு!
 2. Nokia 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானது!
 3. 55-இன்ச் QLED திரை கொண்ட OnePlus TV!
 4. Android Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை!
 5. 3 பின்புற கேமராக்களுடன் அறிமுகமானது சாம்சங் Galaxy A50s, Galaxy A30s!
 6. இன்று விற்பனையில் Mi A3, விலை, சிறப்பம்சங்கள், சலுகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!
 7. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 8. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 9. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 10. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.