சாம்சங் களமிறக்கியுள்ள 'கேலக்ஸி பட்ஸ்'... விலை மற்றும் இதர தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சாம்சங் களமிறக்கியுள்ள 'கேலக்ஸி பட்ஸ்'... விலை மற்றும் இதர தகவல்கள்!

இந்தியாவில் சுமார் 9,200 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்
  • 6 மணிநோரம் வரை பாட்டு கேட்க முடிகிறது.
  • வரும் மார்ச் 8 முதல் இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விற்பனைக்கு வெளியாகியுள்ள
  • இந்த பட்ஸ் சார்ஜிங் கேஸீடன் வெளியாகுகிறது.

கடந்த புதன் கிழமையன்று சாம்சங் எம் வகை போன்களுடன், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்தகட்ட தலைமுறையின் தொழிநுட்ப வளர்சியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வையர்லெஸ் இயர்பட்ஸ் (ear buds), இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்ஸை காட்டிலும் 30 சதவிகிதம் சிறியது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிளின் ஏர்போட்ஸ் போலவே சாம்சங்கின் புதிய அறிமுகமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் வெளியாகும் போது சார்ஜிங் கேஸ் உடன் வெளியாகுகிறது. இந்த இயர்பட்ஸ் சாம்சங் தயாரிப்புகள் உட்பட பல முன்னனி கருவிகளுடன் பொருத்திக் கொள்ளலாம்.

 

சாம்சங் கேலக்ஸி பட்ஸின் விலை:

புதிய அறிமுகமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் இந்தியாவில் 9,200 ரூபாய்க்கு வரும் மார்ச 8 ஆம் தேதி முதல்  விற்பனைக்காக வெளியாகிறது. மேலும் இந்த கேலக்ஸி பட்ஸ் கறுப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் வெளியாககிறது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸின் அம்சங்கள்:

இந்த சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 5.8 பை டைனமிக் டிரைவர் கொண்டுள்ளது. பிக்ஸ்பை உடன் வெளியாகும் இந்த புதிய தயாரிப்பு பிரிட்டிஷ் இங்கலிஷ், ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் சொல்லப்படும் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளும்.

மேலும் சாம்சங் நிறுவனம் ‘என்ஹான்சிடு ஆம்பியன்ட் சவுண்டு' அமைப்பை இந்த கருவியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சத்தம் அதிகம் மற்றும் குறைவாக இருக்கும் இடங்களிளும் சமமான ஆடியோ வசதியை பெற உதவுகிறது.

அத்துடன் இந்த சாம்சங் பட்ஸ் கருவியில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி மற்றும் 58mAh பேட்டரி வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இயர் பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 5 மணிநேர போன் அழைப்புகளும் அல்லது 6 மணிநேர பாட்டுகளையும் கேட்க முடியும். மேலும் மீண்டும் சார்ஜ் செய்துகொள்ள 15 நிமிடங்களே போதும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வோரு இயர்பட்டும் 5.6 கிராம் எடை கொண்டுள்ள நிலையில் பல முக்கிய சென்சார்கள் மற்றும் யுஎஸ்பி டைப்-சி வகை சார்ஜிங் கேபிளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.