முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!

இந்த எம்ஐ பேண்ட் 4, 2,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைலைட்ஸ்
  • Mi Smart Band 4, 2,299 ரூபாய்க்கு விற்கப்படும்
  • 5 வண்ண ஸ்டிராப்களில் இந்த பேண்ட் விற்பனை செய்யப்படும்
  • 24x7 இதயத் துடிப்பு கண்காணித்தலை இந்த பேண்ட் செய்யும்

ஷாவ்மி-யின் Mi Band 4, இன்று இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது. ‘ஸ்மார்ட்டர் லிவ்விங் 2020' என்னும் நிகழ்ச்சியில் இந்த ஃபிட்னஸ் பேண்ட் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எம்ஐ ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர், எம்ஐ மோஷன் இரவு விலக்கு 2, மற்றும் புதிய எம்ஐ தொலைக்காட்சிகள் வெளியிடப்பட்டன. 20 நாட்களுக்கு இந்த எம்ஐ பேண்ட் 4-ல் சார்ஜ் நிற்கும் என்று சொல்லப்படும் நிலையில், 50 மீட்டர் வரை தண்ணீருக்கு உள்ளும் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 24*7 இதயத் துடிப்பு கண்காணித்தல் மற்றும் உறக்கத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட வசதிகளும் இந்த பேண்டில் இருக்கின்றன. 

இந்த எம்ஐ பேண்ட் 4, 2,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று 12 மணி முதல் இந்த பேண்ட், தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது. எம்ஐ.காம், அமேசான் தளம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் கடைகளில் இந்த பேண்ட்-ஐ வாங்க முடியும். 5 நிற ஸ்டிராப் வண்ணங்களில் இந்த எம்ஐ பேண்ட் 4 கிடைக்கும். அதே நேரத்தில் எம்ஐ பேண்ட் 3-யின் ஸ்டிராப்புகளையும் பொறுத்தி உபயோகித்துக் கொள்ளலாம். 

இந்த எம்ஐ பேண்ட் 4 மிக முக்கிய ஹைலைட்ஸுகள், ஆமோலெட் டிஸ்ப்ளே, 50 மீட்டர் ஆழம் வரை தண்ணீரைத் தாக்குப் பிடிக்கும் திறன், 24*7 இதயத் துடிப்பு கண்காணித்தல், 2.5டி டெம்பர்டு க்ளாஸ் பாதுகாப்பு, 135 எம்.ஏ.எச் பேட்டரி ஆகிய வசதிகள் ஆகும். 

இந்த எம்ஐ பேண்ட் 4-ல் புதியதாக ஸ்விம் டிராக்கிங் வசதி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை உள்ளிட்ட மாறுபட்ட ஸ்விம்மிங் வகைகளில் நீந்தினாலும் அதை கண்காணிக்கும். மேலும் டிரெட்மில், நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் உள்ளிட்ட வித்தியாசமான உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது போல், தனது உள்வாங்கும் திறனை மாற்றிக் கொள்ளும் எம்ஐ பேண்ட் 4. தூக்கத்தை கண்காணிக்கும் திறன் மட்டுமல்லாமல், டிவைஸ் ஃபைண்டர், ஸ்டாப்வாட்ச், அலார்ம், ஐடில் அலெர்ட், இன்கமிங் அழைப்பு அலெர்ட் உள்ளிட்ட வசதிகளையும் இந்த பேண்ட் பெற்றுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.