1,999 ரூபாய்க்கே உங்கள் கைகளில் ஒரு ஸ்மார்ட்வாட்ச்: அறிவித்த லெனோவா நிறுவனம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
1,999 ரூபாய்க்கே உங்கள் கைகளில் ஒரு ஸ்மார்ட்வாட்ச்: அறிவித்த லெனோவா நிறுவனம்!

1,999 ரூபாய் மதிப்பு கொண்ட லெனோவாவின் குறைந்தவிலை ஸ்மார்ட்வாட்ச்

ஹைலைட்ஸ்
  • லெனோவா ஈகோ-வின் விலை 1,999 ரூபாய் மட்டுமே
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் தாங்கும் பேட்டரி
  • லெனோவா லைப் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இனைத்துக்கொள்ளலாம்.

லெனோவா நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சீன நிறுவனமான லெனோவா, தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்-ற்கு, லெனோவா ஈகோ என பெயரிட்டுள்ளது. சாதாரணமாக ஸ்மார்ட்வாட்ச்கள் என்றாலே, அதன் விலை உச்சத்தில்தான் இருக்கும், பல ஆயிரங்களை தொடும் அளவில் அதன் விலை இருக்கும். ஆனால், இந்த நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள லெனோவா ஈகோ-வின் விலை 1,999 ரூபாய் மட்டுமே. ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் தாங்கும் பேட்டரி வசதி, 50மீட்டர்கள் வரை நீர் உட்புகாதன்மை(Water Resistant), போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட இந்த லெனோவா ஈகோவில், உங்கள் இதய துடிப்பு அளவு, எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள் போன்றவற்றை அளவிட முடியும். மேலும் உங்கள் மொபைல்போனிற்கு வரும் அழைப்புகள், மெசேஜ்கள், சமுக வலைதளத்தகவல்கள் அனைத்தும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் பிரதிபளிக்கும்.

ஃப்ளிப்கார்ட் மற்றும் க்ரோமா ஆகிய நிறுவனங்களின் தளங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த லெனோவா ஈகோ-வின் விலை ரூபார் 1,999 மட்டுமே. இந்த லெனோவா ஈகோவை நீங்கள் ஃப்ளிப்கார்ட்டில் வாங்கினால், உங்கள் ஆக்சிஸ் வங்கியின் பஷ்(Buzz) கிரடிட் கார்டு மூலமாக பணம் செலுத்தி அதன் விற்பனை விலையிருந்த 5 சதவிகிதம் தள்ளுபடி பெறலாம். மேலும் இந்த லெனோவா ஈகோவை நீங்கள் உங்களுடைய அண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் ஆகிய எந்த மொபைல் போன்களுடனும் எளிதில் இணைத்துக்கொள்ளலாம், அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே செயல், லெனோவா லைப்(Lenovo Life) என்ற செயலியை உங்கள் போனில் பதிவிரக்கம் செய்ய வேண்டியதுதான். இந்த செயலி வாயிலாக உங்கள் ஸ்மார்ட்போனை இந்த ஸ்மார்ட்வாட்ச்-உடன் இணைத்துக்கொள்ளலாம். 

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பற்றி பேசுகையில், இது 1.6 இன்ச் அளவு கொண்ட திரையும், மேலும் திரையை வெளிச்சப்படுத்த ஒரு பட்டனும் பொருத்தப்பட்டிருக்கும். ஒருவேளை உங்கள் போனில் நீங்கள் ஏதாவது அலாரம்(Alarm) வைத்திருந்தாலோ அல்லது உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் சமுக வலைதளங்கள் வாயிலாக வரும் நோட்டிபிகேசன்கள் அனைத்தையும் ஒரு சிறிய அதிர்வுடனே உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வெளிப்படுத்தும். 42 கிராம் மட்டுமே எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ரப்பர் வார்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ரிமேட் கேமரா வசதி மூலம், இந்த ஸ்மார்ட்போனின் திரையை தொட்டவாரே உங்கள் ஸ்மார்ட்போனில் படங்கள் எடுத்துக்கொள்ளலாம். 

பல உபயோகமுள்ள செயல்பாடுகளுடன் வெளிவரவுள்ள இந்த ஸ்மார்ட்போன், உங்கள் இதயத்துடிப்பை அளக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஓடும்போதோ அல்லது சைக்கிள் ஓட்டும்போது அல்லது சாதாரனமாக இருக்கும்போதோ உங்கள் இதயம் எவ்வளவு அளவு துடிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடைபயணம் செய்கிறீர்கள் என்பதையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் அளவிட்டு சொல்லும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் நீங்கள் எவ்வளவு நேரம் உறங்குகிறீர்கள், எவ்வளவு நேரம் நீச்சல் அடிக்கிறீர்கள், எவ்வளவு வேகமாக நீச்சல் அடிக்கிறீர்கள் என அனைத்தையும் அளவிட்டு கூறும். 

சார்ஜருடன் விற்பனைக்கு கிடைக்கவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ நீங்கள் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அந்த சார்ஜ் 20 நாட்கள் வரை நீட்டித்திருக்கும். மேலும் உங்கள் உபயோகத்தை பொறுத்து இந்த அளவு வேறுபடலாம்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.