ஆப்பிளின் புதிய 'பீட்ஸ் பவர்பிட்ஸ் ப்ரோ' அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஆப்பிளின் புதிய 'பீட்ஸ் பவர்பிட்ஸ் ப்ரோ' அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஏர்பாட்ஸ் 2 வெளியாகி சில நாட்களே ஆகிய நிலையில் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ அறிமுகமாகியுள்ளது. இந்த தயாரிப்பு ஸ்போர்ட்ஸ் மற்றும் கூடுதல் ஆடியோ வசதியை எதிர்பார்கும் நபர்களுக்குப் பொருந்தும். மேலும் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ தயாரிப்பு சுமார் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பின் டிசைன் காதில் எளிதில் பொருந்தவும் அதே சமயத்தில் ஸ்டைலிஷ் அமைப்பையும் கொண்டுள்ளது.

பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ தயாரிப்பின் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த தயாரிப்பு இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.17,000க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. 'விரைவில் வெளியாகும்' என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இந்த தயாரிப்பு ஐவரி, பிளாக், மோஸ் மற்றும் நேவி நிறங்களில் சந்தைக்கு வரும்.

இந்த தயாரிப்பு சிறந்த சவுண்டு குவாலிட்டி, கிளாஸ் 1 புளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ, ஆப்பிளின் ஹெச்1 சிப் மற்றும் 'ஹேய் சிரி' போன்றவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான வயர்லெஸ் சார்ஜர்களை போல் இந்த தயாரிப்பிலும் சார்ஜிங் கேஸ் வசதி உள்ளது.

வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ள இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ, 5 நிமிடம் சார்ஜ் செய்வதன் மீலம் 1.5 மணிநேரம் பாடல்களை கேட்க முடியும். மேலும் இதில் வால்யூம் கன்ட்ரோல் ஓவ்வோரு இயர்பட்ஸுக்கும் தனியாக அமைந்திருப்பதால் நமது விருபத்திற்கேற்ப வால்யூமை அட்சஜ்ட் செய்ய முடியும். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 
 

விளம்பரம்