அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் விலை என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் விலை என்ன தெரியுமா?

வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் ரூ.7,500க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்
  • இந்த புதிய ஏர்பாட்ஸ் அமெரிக்காவில் விற்பனை!
  • வயர்லெஸ் சார்ஜிங் கேஸ்சை தனியாகவும் வாங்க முடியும்!
  • இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் ஏர்பாட்ஸ் வெளியாகுகிறது!

ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை ஏர்பாட்ஸ் தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த முழுமையான வயர்லெஸ் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மற்றும் ஹெச் 1 ஆடியோ சிப் வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் 'ஹேய் சிரி' வசதி இடம்பெற்றுள்ளது. 

ஏர்பாட்ஸ் தயாரிப்பின் இந்திய விலை:
இந்த புதிய ஏர்பாட்ஸ் அமெரிக்காவில் தற்போது ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள்.காமில் 159$க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் ஆப்பிளின் இந்த ஏர்பாட்ஸ் வெளியாகவுள்ள நிலையில் இவைகள் 14,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் இந்த ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ்சுடன் ரூ.18,900க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் ரூ.7,500க்கு விற்பனையாக உள்ளது

ஆப்பிள் ஏர்பாட்ஸ் அமைப்புகள்:
இந்த புதிய இரண்டாம் தலைமுறை வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் கொண்ட இயர்பாட்ஸ் ஹெச்1 ஆடியோ சிப் மற்றும் 50 சதவிதம் பயன்பாட்டு நேரத்தையும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் 'ஹேய் சிரி' வசதி,  Qi- காம்பேக்டபிள் சார்ஜிங் பேட் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ஹெச் 1 ஆடியோ சிப் பொருத்தவரை அது இந்த ஏர்பாட்சின் செயல்பாடு, கனெக்டிவிட்டி மற்றும் பயன்படுத்தும் நேரம் போன்றவற்றை அதிகரிக்க செயல்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விற்பனைக்காக காத்திருக்கிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 
 

விளம்பரம்