120 கிமீ வேகத்தில் பறக்கும் ஜியோமியின் எலெக்ட்ரிக் பைசைக்கிள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
120 கிமீ வேகத்தில் பறக்கும் ஜியோமியின் எலெக்ட்ரிக் பைசைக்கிள்!

14,000 மில்லி ஆம்பியர் லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 48 வோல்ட் கொண்டு இயங்குகிறது.

ஹைலைட்ஸ்
 • வரும் ஜூன் 4ம் தேதி இது சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது ஹிமோ டி1
 • அடுத்து ஹிமோ வி1 மற்றும் ஹிமோ சி20 பைக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது
 • ஹிமோ டி1 90 மிமி டையர்,ஒன் பட்டன் ஸ்டார்ட்,டிஜிட்டல் டிஸ்ப்ளேயுடன் உள்ளது

ஜியோமி புதிய ஹிமோ டி1 எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதனை எலெக்ட்ரிக் மொபட் பிரிவில் வெளியிட்டுள்ளது. ஹிமோ பிராண்டில் வெளியாகியுள்ள ஹிமோ டி1, ஹிமோ வி1 மற்றும் ஹிமோ சி20 பைக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது. ஹிமோ டி1 90 மிமி டையர், ஒன் பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் டிஸ்ப்ளேயுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹிமோ டி1ன் விலை அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதன் விலை சுமார் 30,700 ரூபாயாக உள்ளது. இதற்கான விற்பனைக்கு பிந்தைய சேவைகளை ஷாங்காய் ஹினோ எலெக்ட்ரிக் டெக்னாலஜி கவனிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 4ம் தேதி இது சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன்பின் மற்ற மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

14,000 மில்லி ஆம்பியர் லித்தியம் அயர்ன் பேட்டரி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 48 வோல்ட் கொண்டு இயங்குகிறது. 60 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹைட்ராலிக் டிஸ்க் ப்ரேக் மற்றும்  சஸ்பென்சன் பிரேக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

53 கிலோ எடை மற்றும் 1515* 665*1025 மிமீ என வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ பைக் சிவப்பு, க்ரே மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 2. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
 3. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
 4. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
 5. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 6. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
 7. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி!
 8. அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!
 9. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 10. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.