வோடாபோனின் புதிய ரீசார்ஜ் ப்ளான், 299 ரூபாய்க்கு புதிய திட்டம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வோடாபோனின் புதிய ரீசார்ஜ் ப்ளான், 299 ரூபாய்க்கு புதிய திட்டம்!

வோடாபோனின் புதிய ரீ-சார்ஜ் திட்டம்

ஹைலைட்ஸ்
 • 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது இந்த திட்டம்
 • 3GB டேட்டா, 1000 மெசேஜ்களை இலவசமாக வழங்கவுள்ளது
 • மும்பை, குஜராத், பஞ்சாப் ஆகிய இடங்களில் அறிமுகம்.

ஓவ்வொரு மாதமும் புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது வோடாபோன் நிறுவனம். அந்த வகையில், இன்று 299 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் அளவற்ற தொலைபேசி அழைப்புகளை வழங்கவுள்ளது, வோடாபோன். ஆனால் 3GB டேட்டா, 1000 மெசெஜ் என திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் வசதிகளை அறிவித்துள்ளது. இந்த டேட்டா மற்றும் மெசேஜ் அளவு மொத்த ப்ளான் வெலிடிட்டி நாட்களுக்கும் அவ்வளவு தான். இந்த திட்டம், இன்றிலிருந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. 

வோடாபோன் 299 ரூபாய் திட்டம், வெலிடிட்டி மற்றும் வசதிகள்:

வோடாபோன் நிறுவனம் இன்றைக்கு புதிதாக அறிவித்துள்ள இந்த 299 ரூபாய் திட்டம், அளவற்ற தொலைபேசி அழைப்புகளை மையப்படுத்தியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த திட்டத்தில், அளவற்ற தொலைபேசி அழைப்புகள் இலவசம். மேலும், இந்த வேலிடிட்டி நாட்களில் 3GB டேட்டாவையும் 1000 மெசேஜ்களையும் இலவசமாக் வழங்கவுள்ளது.

இந்த திட்டம் தற்போதைக்கு மும்பை, குஜராத் மற்றும் ப்ஞ்சாப் ஆகிய இடங்களில் மட்டும்தான் அறிமுகமாகியுள்ளது

அளவற்ற டேட்டாவிற்காகவும், வோடாபோன் நிறுவனம் சமீபத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 229 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள். இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அளவற்ற தொலைப்பேசி அழைப்புகளை தரவுள்ள இந்த திட்டத்தில், நாள் ஒன்றிற்கு 2GB டேட்டா மற்றும் 100 மெசேஜ்கள் இலவசம்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
 2. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
 3. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
 4. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
 5. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
 6. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
 7. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
 8. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
 9. ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்!
 10. இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.