வாசகர்களுக்காக வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்திய 365 நாட்கள் திட்டம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
வாசகர்களுக்காக வோடபோன் நிறுவனம் அறிமுகப்படுத்திய 365 நாட்கள் திட்டம்!

இந்த திட்டம் கேரளாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்

இந்த திட்டத்தின் மூலம் 547.2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்

இந்த ரீசார்ஜ் மூலம் 100 எஸ்.எம்.எஸ்களை ஒரு நாளைக்கு தரமுடியும்

இந்த திட்டம் வோடபோன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது

வோடாபோன் இந்தியா புதியதாக ரூ.1,999 1.5 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத கால்களுடன் தினமும் 100 குறுஞ்செய்திகள் (365 நாட்களுக்கு) என்ற அதரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ப்ரீபெய்டு ப்ளான் சில நாட்களுக்கு முன்னர் வெளியான 1,699 ரூபாய்கான திட்டத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற அதே திட்டங்கள் வோடபோனின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
vodafone rs 1999 prepaid recharge plan gadgets 360 Vodafone

இந்த புதிய ப்ரீபெய்டு திட்டம் கேரளாவில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் மாற்றி மாநிலங்களுக்கும் சில நாட்களில் அறிமுகம் படுத்தப்படலாம்.

இந்த புதிய திட்டத்தால் வாடிக்கையாளர்கள் சுமார் 547 ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய ப்ளானுடன் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லாத எஸ்டீடி கால்கள் மற்றும் ரோமிங்கும் பெறலாம். இந்த அறிவிப்பு விரைவில் வோடபோனின் வலைதளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்