18- 24 வயதினருக்கு வோடஃபோன் அறிமுகப்படுத்திய திட்டம் என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
18- 24 வயதினருக்கு வோடஃபோன் அறிமுகப்படுத்திய திட்டம் என்ன தெரியுமா?

18-24 வயதினர் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்!

ஹைலைட்ஸ்
  • இந்த புதிய ஆஃபர் மூலம் அமேசான் பிரைம் சாந்தா ரூ.499க்கு வழங்கப்படுகிறது.
  • இத்திட்டம் வரும் ஜூன் 30 முதல் செயல்பாட்டில் உள்ளது.
  • 'மை வோடஃபோன் ஆப்' மூலம் இந்த திட்டத்தை செயல் படுத்த முடியும்!

வோடஃபோன் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட 'ரெட் போஸ்ட்பெய்டு' வாடிக்கையாளகளுக்கு அமேசான் ப்ரைம் வசதிகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் வோடஃபோன் நிறுவனம் தனது ப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு புதிய ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தற்போது 'யூத் ஆஃபர் ஆன் அமேசான் ப்ரைம்' என்னும் புதிய சலுகையை  வோடஃபோன் அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்கள் அமேசான் ப்ரைமின் 12 மாத கட்டணத்தில் 50 சதவிகுதம் தள்ளுபடி பெற முடியும். மேலும் இந்த புதிய தள்ளுபடி ஆஃபர் 18-24 வயது வரை இருக்கும் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  

வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடியை புதிய மற்றும் பழைய வோடஃபோன் வாடிக்கையாளர் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.

இந்த ஆஃபரை 'மை வோடஃபோன் ஆப்'-பை பதிவிறக்கம் செய்த பின்னர் மொபைல் எண் மற்றும் சரியான பிளானை தேர்வு செய்து பெற முடியும். ஒரு வருடத்திற்கான அமேசான் ப்ரைம் கட்டணம் ரூ.999 ஆக இருக்க தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தள்ளுபடியின் மூலம் பாதியாக குறைந்து ரூ.499 ஆக பெற முடியும். 

ரூ.499 வருடாந்திர சந்தாவை செலுத்திய பிறகு அமேசான் கணக்கை அக்டிவேட் செய்ய முடியும்.மேலும் இந்த அமேசான் ப்ரைம் திட்டத்தின் மூலம் அமேசானில் வாங்கும் பெருட்களுக்கு தள்ளுபடி மற்றும் விரைவான டெலிவரியைப் பெற முடியும். 

அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தின் மூலம் அமேசான் மியூசிக் மற்றும் ப்ரைம் வீடியோக்களை உபயோகிக்க முடியும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்