மீண்டும் விலை குறைக்கப்பட்ட 'டாட்டா ஸ்கை' HD, SD செட்-டாப் பாக்ஸ் திட்டங்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
மீண்டும் விலை குறைக்கப்பட்ட 'டாட்டா ஸ்கை' HD, SD செட்-டாப் பாக்ஸ் திட்டங்கள்!

Photo Credit: Tata Sky Website

புதிய விலையில் அறிமுகமாகியுள்ள 'டாட்டா ஸ்கை' HD, SD செட்-டாப் பாக்ஸ் திட்டங்கள்.

ஹைலைட்ஸ்
  • டாட்டா ஸ்கை HD செட்-டாப் பாக்ஸ் திட்டத்தின் விலை 1,499 ரூபாய்
  • டாட்டா ஸ்கை SD செட்-டாப் பாக்ஸ் திட்டத்தின் விலை 1,399 ரூபாய்
  • தன் தளத்தில் அறிவித்திருந்தது டாட்டா ஸ்கை நிறுவனம்

இந்தியாவில் மீண்டும் டாட்டா ஸ்கையின் HD மற்றும் SD செட்-டாப் பாக்ஸ் திட்டங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களின் விலையை குறைப்பது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்ற மாதமும், இந்த திட்டங்களின் விலை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தனது இணையதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள டாட்டா ஸ்கை நிறுவனம், இந்த திட்டங்களில் விலையை 300 ரூபாய் வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு குறிப்பாக டாட்டா ஸ்கையின் HD செட்-டாப் பாக்ஸ் திட்டத்தை மலிவாக்கியுள்ளதால், இந்த திட்டத்திற்கான வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு கூடியுள்ளது. 

டாட்டா ஸ்கையின் புதிய அறிவிப்பின்படி, தற்போது டாட்டா ஸ்கை HD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 1,499 ரூபாய் என்ற விலையில் கிடைக்கவுள்ளது. அதே சமையம் டாட்டா ஸ்கை SD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 1,399 ரூபாய் என்ற விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. டிஷ் டிவியுடன் ஒப்பிடுகையில் இதன் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. டிஷ் டிவியில் HD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 1,590 ரூபாய் என்ற விலையிலும், SD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 1,490 ரூபாய் என்ற விலையிலும் உள்ளது. 

முன்னதாக கடந்த மாதம் செய்யப்பட்ட விலை குறைப்பிற்கு பின்னர், டாட்டா ஸ்கை HD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 1,800 ரூபாய் என்ற விலையிலும், டாட்டா ஸ்கை SD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 1,600 ரூபாய் என்ற விலையிலும் இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விலை குறைப்பின்படி 301 ரூபாயும், SD செட்-டாப் பாக்ஸ் திட்டம் 201 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.