சாம்சங் போட்ட ஒப்பந்தம்... ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச ஆஃபர்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சாம்சங் போட்ட ஒப்பந்தம்... ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச ஆஃபர்!

Photo Credit: Reliance Jio

இன்று நடக்கும் ஸ்பெஷல் சேலில் விற்பனையாகும் போன்கள் சாம்சங் எம்10 மற்றும் எம்20 ஆகும்

ஹைலைட்ஸ்
  • இன்று மதியம் 1 முதல் 12 மிணி வரைக்கும் நடக்கும் புதிய சேல்!
  • கேலக்ஸி எம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் டபுள் டேட்டா ஆஃபர்!
  • அடுத்த ஃபிளாஷ் சேல் வரும் 26 ஆம் தேதி நடக்கிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான அறிவிப்பின்படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் சாம்சங் நிறுவனம் இணைந்து கேலக்ஸி எம் 10 மற்றும் எம் 20 போன்களுக்கான ஸ்பெஷல் சேலை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று (22, பிப்ரவரி) இந்த சேல் நடக்கிறது. மேலும் இந்த சேல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. சாம்சங் கேலக்ஸி எம் 10 அல்லது 20 போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு டேட்டா பிளான் கிடைக்கும். 

இந்த ஸ்பெஷல் சேல் இன்று மதியம் 12 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்குள் நடக்கும். மேலும் இந்த ஸ்பெஷல் தள்ளுபடி போனை ஜியோ ஆப் அல்லது ஜியோ.காம் தளங்களில் வாங்க முடியும். பயன்பாட்டாளர்கள் விபரத்தை சரிபார்ப்பு செய்த பிறகு கேலக்ஸி எம் வகை போன்களை வாங்க முடியும்.

கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூபாய்.12,990(4ஜிபி+64ஜிபி)க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே மாடலில் (3ஜிபி+32ஜிபி) வகை மாடல் ரூபாய் 10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங்கின் எம்10 பொறுத்தவரை (3ஜிபி+32ஜிபி) வகை மாடல் ரூபாய் 8,990-க்கும், (2ஜிபி+16ஜிபி) மாடல் ரூபாய் 7,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த சேலின் போது விலையில் மாற்றம் ஏதுமில்லை.

மேலும் சாம்சங் சார்பில் நடத்தப்படும் அடுத்த ஃபிளாஷ் சேல் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஜியோ நிறுவனம் தரும் இந்த ஆஃபர் பெருவதற்கு கேலக்ஸி எம் வகை போன் உரிமையாளர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 198 அல்லது ரூபாய் 299 க்கு ரீச்சார்ஜ் செய்துகொண்டு டபுள் ஆஃபராக மே மாதம் வரை பயன்படுத்த முடியும்.

மேலும் அண்டிராய்டு 8.1 ஓரியோ வில் இயங்கும் சாம்சங் எம்10 ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் அளவு ஸ்கிரீன்  உடையது. இரண்டு கேமராக்களுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன் 160 கிராம் எடை மற்றும் 3,400 mAh பேட்டரி பவரை கொண்டுள்ளது. 

அதுபோல் சாம்சங் கேலக்ஸி எம்20 அண்டிராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. மேலும் 6.3 இஞ்ச் உயரமுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3 மற்றும் 4 ஜிபி ரேம் வசதிகளுடன் வெளியானது. 32 மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ கார்டு வசதியுடன் 5,0000mAh பேட்டரி பவருடன் விற்பனையில் கலக்கி வருகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
  2. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
  3. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  4. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  5. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  6. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  7. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  8. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  9. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  10. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.