ரூ.600-க்கு ப்ராட்பேண்ட், லேண்டுலைன், டிவி இணைப்பு… ஜியோவின் பலே திட்டம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரூ.600-க்கு ப்ராட்பேண்ட், லேண்டுலைன், டிவி இணைப்பு… ஜியோவின் பலே திட்டம்!

ஓ.என்.டி ரவுட்டர் மூலம் தனது இணைய சேவை இணைப்பின் வேகத்தை ஜியோ நிறுவனம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • இன்னும் 3 மாதத்தில் இந்தத் திட்டம் அமலுக்கு வரலாம்
  • 600 ரூபாயில் இந்தத் திட்டத்தை அமல் செய்ய ஜியோ முயன்ற வருகினறதாம்
  • ஜியோ ஜிகாஃபைபர் மூலம் இத்திட்டம் அமலுக்கு வருமாம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ப்ராட்பேண்ட், லேண்டுலைன் மற்றும் டிவி காம்போவை மாதம் 600 ரூபாய்க்கு கொடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் மூலம் இந்த சேவை கொடுக்கப்படும் எனப்படுகிறது. அதேபோல 1000 ரூபாய் கூடுதலாக பெற்று வீட்டு இணையதள வசதியை ஜியோ கொடுக்க உள்ளதாகவும், அதன் மூலம் 40 சாதனங்களை இணைத்துக் கொள்ளும் வசதியையும் செய்து தர உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம், தனது ஜிகாஃபைப்ர ப்ராட்பேண்ட் சேவையை சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. ஆனால், அது நாட்டின் சில பகுதிகளில் மட்டும்தான் கிடைக்கிறது. இந்த சேவையப் பெற பயனர்கள் 4,500 ரூபாய் டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைக்கு ஜியோ ஜிகாஃபைபர் ப்ராட்பேண்ட் சேவை, ஒரு மாதத்துக்கு 100ஜிபி டேட்டாவை 100 எம்.பி.பி.எஸ் வேகத்துக்குத் தந்து வருகிறது. ஆனால் ஜியோ, இந்த சேவையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல் தெரிவிக்கப்படுகிறது. ப்ராட்பேண்ட் - லேண்டுலைன் - டிவி சேவைகளை 600 ரூபாய்க்கு ஜியோ இந்த புதிய திட்டம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சேவையின் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள், 600 டிவி சேனல் சேவைகள், 100 எம்.பி.பி.எஸ் ப்ராட்பேண்ட் சேவை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த புதிய வசதி இன்னும் 3 மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் எனப்படுகிறது. ஓ.என்.டி ரவுட்டர் மூலம் தனது இணைய சேவை இணைப்பின் வேகத்தை ஜியோ நிறுவனம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய சேவை மூலம் 40 மின்னணு சாதனங்களில் இணையதள வசதி பெற முடியும் என்றும் அதற்குத் தனியாக வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்