ஜியோவின் அடுத்த அதிரடி, 'ஜிகாபைபர்' ஆகஸ்ட் 12 அறிமுகமாகவுள்ளது!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஜியோவின் அடுத்த அதிரடி, 'ஜிகாபைபர்' ஆகஸ்ட் 12 அறிமுகமாகவுள்ளது!

ஜியோ 'ஜிகாபைபர்' (GigaFiber), அதிவேக பைபர்-டு-தி-ஹோம் (FTTH) சேவையை கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • 'ஜிகாபைபர்' சேவைக்கான முன்பதிவு கடந்த ஆண்டு துவங்கியது
  • 'ஜிகாபைபர்' சேவைகளின் பீட்டா சோதனைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன
  • ஜியோவும் 600 ரூபாய் மதிப்பில் காம்போ திட்டத்தையும் அறிவித்துள்ளது

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஜியோ 'ஜிகாபைபர்' (GigaFiber), அதிவேக பைபர்-டு-தி-ஹோம் (FTTH) சேவை, அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 12 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த அறிமுகம் ரிலையன்ஸ் நிறுவங்களில் ஆண்டு பொது கூட்டத்தின்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது கூட்டத்தின்போது, ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் 1,100 நகரங்களில் இந்த  'ஜிகாபைபர்' சேவைக்கான முன்பதிவை துவங்கி வைத்தது. இருப்பினும், இன்னும் வணிக ரீதியான அறிமுகம் இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் காலாண்டு நிதி முடிவுகள் பற்றி அறிவிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜிகாபைபருக்கான பீட்டா சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இந்த சோதனை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்த பீட்டா சோதனை பல மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஜியோ 'ஜிகாபைபர்' சேவைகளின் பீட்டா சோதனைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட் ஹோம் தீர்வு, விரைவில் 50 மில்லியன் மற்றும் அதை தாண்டிய எண்ணிக்கையிலான வீடுகளை சென்றடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் ஊடக அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிமுகம் குறித்த எந்த ஒரு தகவலையும், ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், ஆகஸ்ட் 12 அன்று ரிலையன்ஸ் நிறுவங்களில் ஆண்டு பொது கூட்டத்தின்போது ஜியோ 'ஜிகாபைபர்' அறிமுகமாகும் என தகவல் வெளியாகிய வண்னம் உள்ளது. 

ஜியோ 'ஜிகாபைபர்' 4,500 ரூபாய் என்ற பாதுகாப்பு வைப்பு கட்டணத்துடன் கிடைக்கப்பெருகிறது. இருப்பினும், சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆப்டிகல் நெட்வொர்க் டெர்மினல் (ONT) சாதனத்தை அறிமுகப்படுத்தி இந்த பாதுகாப்பு வைப்பு கட்டணத்தை 2,500 ரூபாயாக குறைத்துள்ளது.இதுமட்டுமின்றி, ரிலையன்ஸ் ஜியோவும் 600 ரூபாய் மதிப்பில் இந்த ஜிகாபைபர் சேவைக்கு ஒரு காம்போ திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.