340 மில்லியன் வாடிக்கையாளர்களை தாண்டிய ஜியோ-ஆண்டு சந்திப்பில் அம்பானி!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
340 மில்லியன் வாடிக்கையாளர்களை தாண்டிய ஜியோ-ஆண்டு சந்திப்பில் அம்பானி!

வோடாபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை மிஞ்சியது ஜியோ நிறுவனம்.

ஹைலைட்ஸ்
  • 500 மில்லியன் வாடிக்கையாளர்களை பெருவதை இலக்காக கொண்டுள்ளது
  • உலகின் இரண்டாவது மிகப்பெரிய சேவையாக மாறியுள்ளது ஜியோ
  • ஒவ்வொரு மாதமும் 10 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெறுகிறது

ரிலையன்ஸ் நிறுவனங்களின் 42வது ஆண்டு போது சந்திப்பு (AGM 2019) ஆகஸ்ட் 12-ஆன இன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ சேவை 331.1 மில்லியன் வாடிக்கையாளர்களை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த நிகழ்வில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி பேசுகையில், ஜீயோ இந்தியாவில் 340 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டி, உலகின் அதிவேகமான வளரும் டிஜிட்டல் சேவையாக மாறியுள்ளது என கூறியுள்ளார். ஜியோ பற்றி அவர் மேலும் பேசுகையில், இந்த தொலைதொடர்பு செப்டம்பர் 5-ல் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளது.

ஜியோ ஒவ்வொரு மாதத்திற்கும் 10 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. 

இதே வேகத்தில் விரைவில் 500 மில்லியன் வாடிக்கையாளர்களை பெருவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார். ஒரே நாட்டில் மட்டுமே இயங்கும் ஒரு தொலைதொடர்பு நிறுவனம், உலகின் இரண்டாவது பெரிய் நெட்வோர்க்காக உள்ளது என்பது தனிசிறப்பு என்று ஜியோ தொலைதொடர்பு சேவைக்கு புகழாறம் சூட்டியுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவில் வோடாபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை மிஞ்சியது ஜியோ நிறுவனம். இரண்டு நிறுவனங்களும் வெளியிட்ட வாடிக்கையாளர் எண்ணிக்கை விபரங்களை வைத்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது. வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 320 மில்லியனாக குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். ஜியோ நிறுவனம் 331.1 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.