'திரும்ப வந்துடேன்னு சொல்லு....!'- Jio வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'திரும்ப வந்துடேன்னு சொல்லு....!'- Jio வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!

இன்டர்-நெட்வொர்க் அவுட்கோயிங் காலுக்கு 1 நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் என்று ஜியோ இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது.

ஹைலைட்ஸ்
  • ரிலையன்ஸ் ஜியோ ட்விட்டரில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது
  • அக்டோபர் 9-க்கு முன் செய்யப்பட்ட ரீசார்ஜ்களில் இலவச சலுகைகளை வழங்குகிறது
  • 4 IUC டாப்-அப் ஜியோ திட்டங்கள் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டன

இந்த வார தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ வியாழக்கிழமை முதல் பிற நெட்வொர்க்குகளுக்கு அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ஆறு பைசா கட்டணம் வசூலித்ததற்காக பொதுமக்களின் கண்டனங்களை எதிர்கொண்டது. இப்போது, ​​மும்பையை தலைமையிடமாகக் கொண்ட டெல்கோ, அக்டோபர் 9 அல்லது அதற்கு முன்னர் ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜியோ அல்லாத எண்களுக்கு இலவச அவுட்கோயிங் அழைப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மொபைல் ஆபரேட்டர்களுக்காக இன்டர்-நெட்வொர்க்கிங் அவுட்கோயிங் அழைப்புகளை செயல்படுத்த இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India - TRAI) நிர்ணயித்திருக்கும் புதிய குரல் கட்டணமாக, இன்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணம் (Interconnect Usage Charge - IUC) இருக்கும் என்று நிறுவனம் முன்பே கூறியிருந்தது. கூடுதல் ஜியோ குரல் அழைப்பு கட்டணங்களை, வலுக்கட்டாயமாக கட்ட சொல்லும் ஆப்பேட்டர்கள், ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய்க்கு கூடுதலாக 1 ஜிபி டேட்டாவை வழங்கி அவற்றை ஈடுசெய்ய வேண்டும்.

அக்டோபர் 9 அல்லது அதற்கு முன்னர் ரீசார்ஜ் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், அவுட்கோயிங் அழைப்புகளில் இலவச அழைப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ தனது அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியிட்டுள்ள ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போதுள்ள ஜியோ திட்டத்தின் காலாவதி தேதி வரை பெனிபிட் வழங்கப்படும்.

உங்களிடம் இருக்கும் திட்டம் காலாவதியாகும் வரை, ஜியோ எண்ணிலிருந்து பிற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதே இதன் பொருள். அதன்பிறகு, திட்டத்தின் காலாவதிக்குப் பின் ஆஃப்-நெட் அவுட்கோயிங் அழைப்புகளைச் மேற்கொள்ள, புதிய ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இந்த வார தொடக்கத்தில் ரிலையன்ஸ் ஜியோ நான்கு ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சர்களை அறிவித்தது - ரூ. 10 முதல் ரூ. 100 வரை. இந்த வவுச்சர்கள் 20 ஜிபி டேட்டாவுடன் 1,362 நிமிடங்கள் வரை உரிமத்தை வழங்குகின்றன. 

மற்ற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு குரல் அழைப்புகளைச் செய்ய ஜியோ பயனர்கள் ஐ.யூ.சி டாப்-அப் வவுச்சரை வாங்க வேண்டியிருக்கும். அப்போது, ​​அவர்கள் தொடர்ந்து ஜியோ எண்களுக்கு இலவச அழைப்புகளைச் செய்யலாம் மற்றும் Voice-over-Internet-Protocol (VoIP) ஐப் பயன்படுத்தலாம் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். டேட்டா ஒதுக்கீட்டில், வாட்ஸ்அப் அல்லது ஆப்பிளின் ஃபேஸ்டைம் போன்ற தளங்களைப் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்டிருந்தபடி, TRAI பூஜ்ஜிய முடித்தல் கட்டணம் நடைமுறைக்கு வரும் நேரம் வரை ஆஃப்-நெட் அவுட்கோயிங் அழைப்புகளின் கட்டணம் இருக்கும். 

இது, 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.