இன்று அறிமுகமாகும் ஜியோ 'ஜிகா பைபர்' திட்டம்: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இன்று அறிமுகமாகும் ஜியோ 'ஜிகா பைபர்' திட்டம்: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!

தனது சோதனையின்போதே 15 மில்லியன் முன்பதிவுகளை இந்த ஜியோ பைபர் பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • ஜியோ பைபர் செப்டம்பர் 5-ல் அறிமுகமாகவுள்ளது
  • மாதத்திற்கு 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை சேவை விலைகளில் அறிமுகம்
  • இதனுடன் 'பர்ஸ்ட் டே- ஃபர்ஸ்ட் ஷோ' சேவையும் அறிமுகம்

ரிலையன்ஸ் நிறுவனம், தனது 42வது ஆண்டு பொது சந்திப்பில், இந்த ஜியோ ஜிகாபைபர் குறித்த பல முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தது. இந்த திட்டம் அறிமுகமாகும் தேதி, விலை மற்றும் பல தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். இது வரை இந்த ப்ராட்பேண்ட் சேவை 15 மில்லியன் முன்பதிவுகளை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு இந்த சேவை 1,100 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த சேவை 1,600 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படவுள்ளது. இந்த 1,600 நகரங்களில் 20 மில்லியன் வீட்டு சேவைகளையும், 15 மில்லியன் தொழில் சேவைகளையும் எட்ட வேண்டும் என திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

ஜியோ பைபர் திட்டம் மற்றும் அறிமுக தேதி!

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்பு எது என்றால், இந்த ஜியோ பைபர்தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ பைபர் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5 தேதி அறிமுகமாகும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சேவையின் சோதனையை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

இந்த திட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் தற்போது 100Mbps வேகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த சேவை, விரைவில் 1Gbps வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜியோ பைபர் விலை மற்றும் அறிமுக சலுகை!

மாதத்திற்கு 700 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பல விதமான சேவை விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அவற்றில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த ஜியோ பைபரை ஆண்டு சந்தாவில் பெறுபவர்களுக்கு HD LED அல்லது 4K டிவிக்களை இலவசமாக வழங்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் ஜியோ பாரெவர் ப்ளான் (Jio Forever Plan) எனப்படும் ஆண்டு திட்டத்தை பெற்றால் HD LED அல்லது 4K டிவியுடன் 4K செட்-டாப் பாக்ஸையும் இலவசமாக வழங்கவுள்ளது ஜியோ நிறுவனம். 

'பர்ஸ்ட் டே- ஃபர்ஸ்ட் ஷோ' (First-Day-First-Show) சேவை!

ஜியோவின் பிரீமியம் வாடிக்கையாளர்கள், படங்கள் திரையரங்குகளில் வெளியான அதே நாளிலேயே, தங்கள் வீட்டில் அமர்ந்தபடி அந்த படங்களை பார்த்துக்கொள்ளலாம் என அம்பானி அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் 2020ஆம் ஆண்டின் பாதியில் அறிமுகமாகவுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.