75 ரூபாய்க்கு 10ஜி.பி டேட்டா - பி.எஸ்.என்.எல் அதிரடி திட்டம்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
75 ரூபாய்க்கு 10ஜி.பி டேட்டா - பி.எஸ்.என்.எல் அதிரடி திட்டம்

ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில், 75 ரூபாய்க்கு புதிதாக ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது.

அதன்படி 75 ரூபாய்க்கு, 10 ஜி.பி டேட்டாவும், அன்லிமிட்டெட் அழைப்புகளையும் செய்யலாம். 15 நாட்களுக்கான இந்த ப்ரீபெய்டு திட்டத்தில் 500 எஸ்.எம்.எஸ்களையும் அனுப்பலாம். 15 நாட்களுக்கு பின் 98 ரூபாய்க்கு எஸ்.டி.வி ரீச்சார்ஜ் செய்வதன் மூலம், 180 நாட்களை வரை நீட்டித்துக் கொள்ளலாம்.

ஜியோவின் 98 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்துக்கு போட்டியாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜியோவில் 98 ரூபாய் பிளானில், 2ஜி.பி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகளையும் 28 நாட்களுக்கு செய்ய முடியும்.

இதற்கு முன், 171 ரூபாய்க்கு தினமும் 2 ஜி.பி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் அழைப்புகளை 30 நாட்களுக்கு செய்து கொள்ளும் ரீச்சார்ஜ் திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.