ரூ.98 க்கு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்.என்.எல்-லின் புதிய திட்டம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ரூ.98 க்கு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்.என்.எல்-லின் புதிய திட்டம்!

'எராஸ் நவ்' சந்தாவுடன் வரும் இந்த புதிய 98 ரூபாய்கான திட்டம் 24 நாட்ள் வரை செல்லுபடியாகும்

ஹைலைட்ஸ்
  • பி.எஸ்.என்.எல் தனது 98 ரூபாய்கான திட்டத்தை மாற்றியுள்ளது!
  • தினசரி 2ஜிபி டேட்டா 24 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.
  • இதற்கு முன்னர் 26 நாட்களுக்கு 1.5 ஜிபி வரை பயன்படுத்த முடியும்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நிறுவனம் தனது பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் திட்டத்திலிருந்து சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 

அதன்படி தற்போது அறிமுகமாகியுள்ள ரூ.98க்கான திட்டத்தின் படி தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் எராஸ் நவ் சந்தா திட்டத்தையும் பயன்படுத்த முடியும். இந்த புதிய எராஸ் நவ் சந்தா திட்டம் ரூ.298, ரூ.333 மற்றும் ரூ.444 ரீசார்ஜூகளின் திட்டத்தின் மூலமும் பெறலாம். 

இதற்கு முன்னர் ‘டேட்டா சுனாமி' ஆஃபரின் மூலம் தினம்தோறும் 1.5ஜிபி டேட்டா 26 நாட்களுகக்கு வழங்கப்பட்டு வந்தது. ஹரியானா மற்றும் தமிழ்நாட்டின் இணையதளங்களில் இதை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இந்த புதிய திட்டம் விரைவில் எல்லா இடங்களில் அமலாக்கப்படும்.

மேலும் இந்த 98 ரூபாய் திட்டம் 24 நாட்களுக்கு மட்டுமே செயல்படுத்த முடியும். எராஸ் நவ் சந்தா திட்டத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட நாட்கள் வரையில் இதை ரூ.98 திட்டத்தின் கீழ் பயன்படுத்த முடியும். அதேபோன்று ரூ.298 மற்றும் ரூ.333 கான ரீசார்ஜ் திட்டத்தின் மூலமாகவும் இந்த எராஸ் நவ் சந்தாவையும் பெற முடியும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.