ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் புதிய பிளான்கள்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் புதிய பிளான்கள்

பி.எஸ்.என்.எல் 198 ரூபாய் பிளானுக்கு 1.5 ஜி.பி டேட்டா வழங்குகிறது

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது டேட்டா எஸ்.டி.வி 155 சிறப்பு பிளானில் மாற்றம் செய்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்துள்ளது. முன்னதாக இது, சிறப்பு பிளானாக, 90 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இப்போது, அது எல்லோருக்குமான பிளானாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவோடு போட்டியிடுவதற்காக, அதிக டேட்டா பேக்குகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.

இப்போது டேட்டா எஸ்.டி.வி 155 பிளானில், தினமும் 2ஜி.பி டேட்டா வீதம் 17 நாட்களுக்கு 34 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம், ஜியோவின் 149 ரூபாய் திட்டத்துக்கு போட்டியாக இருக்கும் வகையில் அறிவித்துள்ளது பி.எஸ்.என்.எல்.

அதே போல, ஜியோவின் 198 ரூபாய் திட்டத்துக்கு ஈடாக பி.எஸ்.என்.எல் 198 ரூபாய் பேக்கும் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் 198 ரூபாய்க்கு 1.5 ஜி.பி டேட்டா தருகிறது. அதுமட்டுமின்றி, தனது அனைத்து எஸ்.டி.வி பேக்குகளுக்கும் அதிக டேட்டா வழங்கி பிளான்களை அறிவித்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்