“5ஜிபி இலவச இணைய சேவை!”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
“5ஜிபி இலவச இணைய சேவை!”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்

5ஜிபி டேட்டாவுக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகமும், அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் கிடைக்கும். 

ஹைலைட்ஸ்
  • பி.எஸ்.என்.எல் சென்னை தளத்தில் இது குறித்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது
  • 5ஜிபி டேட்டா, 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் கொடுக்கப்படும்
  • அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை இருக்கும்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ‘5ஜிபி இலவச இணைய சேவை'-ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. தனது லேண்டுலைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்புச் சலுகை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது பி.எஸ்.என்.எல். இந்த சேவை கடந்த மார்ச் மாதம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள், ப்ராட்பேண்ட் இணைப்பு சேவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்த சிறப்பு சேவை அளிக்கப்படுகிறது. இந்த 5ஜிபி இலவச டேட்டா சேவைக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகத்தை பி.எஸ்.என்.எல் வழங்கும். அதைத் தாண்டும் பட்சத்தில் 1 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தைப் பெற முடியும். 

இது குறித்து பி.எஸ்.என்.எல் சென்னை தளத்தில், “இந்த 5ஜிபி இலவச இணைய சேவை என்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் பொருந்தும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருப்பவர்களுக்கு இந்த புதிய சேவையைப் பெற முடியாது. 5ஜிபி டேட்டாவுக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகமும், அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் கிடைக்கும். 

இந்த குறுகிய கால சேவை என்பது பி.எஸ்.என்.எல் லேண்டு லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை கிடைக்கும். 

இந்த இலவச சேவைக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணம் எதவும் பெறப்படாது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், சொந்த மோடம்-ஐ வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம், முதன்முறையாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த மாதத்தின் 31 ஆம் தேதி வரை, இலவச சேவை வழங்கப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது முறையாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.