ஜியோ ஃபைபருக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் ஃபைபர்! - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஜியோ ஃபைபருக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் ஃபைபர்! - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே!
ஹைலைட்ஸ்
  • பிஎஸ்என்எல் அனைத்து இல்லங்களுக்கும் இண்டர்நெட் கிடைக்க வழி வகுத்து வருகிற
  • அன்லிமிடட் பிராண்ட்பேன்ட் சேவை வழங்கிய பின்னர் இந்த சேவை அறிமுகமாகிறது.
  • 25% கேஷ்பேக் ஆஃபரையும் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.

ஜியோ ஜிகா ஃபைபருக்கு போட்டியாக பிஎஸ்என்எல் தனது பாரத் ஃபைபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஃபைபர் சேவையானது ஒரு நாளைக்கு ஒரு ஜிபி ரூ.1.1 என 35ஜிபி வரை வழங்குகிறது.

இந்த பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவைகள் அதிகபட்சம் நொடிக்கு 100எம்பி வேகத்தில் (100Mbps) டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.500 முன்பணமாக செலுத்த வேண்டும்.

நீங்கள் செலுத்தும் ரூ.500 முன்பணம் ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கானதாகும், இதற்கு வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 வாடகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருடாந்திர ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 25 சதவீத கேஷ்பேக் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையை ஆன்லைன் புக்கிங் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை, ரூ.675, ரூ.845, ரூ.999, ரூ.1,999 உள்ளிட்ட விலைகளில் கிடைக்கிறது.


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.