ஏர்டெல் வழங்கும் ரூ.248க்கான சிறப்பு திட்டம்! முக்கிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஏர்டெல் வழங்கும் ரூ.248க்கான சிறப்பு திட்டம்! முக்கிய தகவல்கள்!

ரூ.248 திட்டதின் மூலம் 1.4ஜிபி டேட்டா, வரம்பற்ற லோக்கல்/பிற மாநில கால்கள் மற்றும் 100 மெசேஜ்கள் போன்ற சேவைகளை 28 நாட்களுக்குபெற முடிகிறது.

ஹைலைட்ஸ்
  • ஏர்டெல் ரூ.248க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த திட்டம் 1.4ஜிபி டேட்டாவை கொண்டுள்ளது!
  • ஏற்கெனவே இருந்த ரூ.345 மற்றும் ரூ.559 திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இருந்த ரூ.345 மற்றும் ரூ.559 ரூபாய்கான திட்டத்தை நீக்கிவிட்டு இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

ரூ.248க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், ஏர்டெல் கனேக்‌ஷன் பெற்ற புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.229 திட்டத்திற்கு மாற்றாக இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ப்ரிபேய்டு ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் தினந்தோறும் ரூ.248 திட்டதின் மூலம் 1.4ஜிபி டேட்டா, வரம்பற்ற லோக்கல்/பிற மாநில கால்கள் மற்றும் 100 மெசேஜ்கள் போன்ற சேவைகளை 28 நாட்களுக்குபெற முடிகிறது.

ஏர்டெல் சார்பில் ரூ.248 மற்றும் ரூ.495 பிரிப்பேய்டு ரீசார்ஜ் ஆஃப்ஷன்களை வழங்கிவந்த ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் வாய்ஸ் கால்களை ஒரு நிமிடத்திற்கு 60 பைசாவும் 100 எம்பி 2ஜி/3ஜி மற்றும் 4ஜி டேட்டா வசிதயை தருகிறது. இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்த திட்டங்களை போல இந்த திட்டமும் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

மேலும் ஏர்டல் சார்பில் ரூ.178 கான எஃப்ஆர்சி திட்டத்தின் மூலம் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதிகளை பெற முடிகிறது. இந்த திட்டங்கள் புதிய கனேக்‌ஷன் சலுகைகளை ஏர்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ஏர்டெல் சிம்கார்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்