ரிலீஸ் ஆனது சையோமி ‘எம்.ஐ பேட் 4’!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரிலீஸ் ஆனது சையோமி ‘எம்.ஐ பேட் 4’!
ஹைலைட்ஸ்
 • சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த டேப்லட் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது
 • இதனுடன் ரெட்மி 6 ப்ரோ போனையும் வெளியிட்டுள்ளது சையோமி
 • இந்தியாவில் வரும் 29-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த டேப்லட்

உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான சையோமி, தனது எம்.ஐ பேட் 4, டேப்லட்டை சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் வெளிட்டுள்ளது. இந்த டேப்லட்டுடன் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போனையும் வெளியிட்டுள்ளது சையோமி. பேட் 4, வை-ஃபை மற்றும் வை-ஃபை + எல்.டி.இ ஆகிய வகைகளில் வெளிவர உள்ளன. 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த டேப்லட்டை ஒரு கையில் பயன்படுத்தக் கூடிய வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 

விலை மற்றும் ரிலீஸ் தேதி

எம்.ஐ பேட் 4, சீன விலைப்படி 1,099 ரென்மின்பி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய விலைப்படி 11,500 ரூபாயாக இருக்கும். இது வை-ஃபை மட்டும் இருக்கும் டேப்லட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள விலை. வை-ஃபை + எல்.டி.இ வகை டேப்லட்டுக்கு 14,600 ரூபாய் பக்கம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் தங்க மஞ்சள் வண்ணங்களில் இந்த டேப்லட் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 29 ஆம் தேதி இந்திய சந்தைக்கு இந்த டேப்லட்கள் வருகின்றன. இப்போதே, ரிசர்வ் செய்து கொள்ளவும் முடியும்.

வசதிகள்

ஆண்ட்ராய்ட் செயல்முறை கொண்ட MIUI 9 ஆபரேட்டிங் மென்பொருளில் இந்த ‘பேட் 4’ டேப்லட் இயங்கும். 8 இன்ச் முழு ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, 16:10 ரேஷியோவில் இருக்கும். 283 பிபிஐ பிக்சல் அடர்த்தி டிஸ்ப்ளேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் க்வால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் மூலம் பவர் பெறுகிறது இந்த டேப்லட். 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் பொருக்கிக் கொள்ளும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

13 மெகா பிக்சல் பின் மேரா மற்றும் 5 மெகா பிக்சல் முன் கேமரா கொண்ட இந்த போனில், 32 அல்லது 64 ஜிபி சேமிப்பு வசதி பொருத்தப்பட்டு உள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 2. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 3. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 4. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 5. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 6. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
 7. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
 8. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
 9. புகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!
 10. 'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.