8,200mAh பேட்டரியுடன் வருகிறது LG G Pad 5 10.1!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
8,200mAh பேட்டரியுடன் வருகிறது LG G Pad 5 10.1!

LG G Pad 5 10.1 tablet, Quick Charge 3.0-ஐ ஆதரிக்கிறது

ஹைலைட்ஸ்
  • LG G Pad 5 10.1 tablet, 4GB RAM, 32GB ஸ்டோரேஜைப் பேக் செய்கிறது
  • இந்த டேப்லெட்டில் 10.1-inch Full-HD+ டிஸ்பிளே உள்ளது
  • LG G Pad 5 10.1, single silver hue நிறத்தில் கிடைக்கிறது

LG G Pad 5 10.1 tablet தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்படுள்ளது. மேலும், அதன் முக்கிய சிறப்பம்சங்களாக 8,200mAh பேட்டரி, quad-core Snapdragon 821 SoC மற்றும் 8-megapixel ரியர் கேமரா உள்ளது. LG G Pad 5 10.1-ன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இதைப் படிக்கவும்.


LG G Pad 5 10.1-ன் விலை

LG G Pad 10.1 tablet-ன் விலை KRW 4,40,000 (சுமார் ரூ. 26,800) ரூபாயாக விலையிடப்பட்டுள்ளது. இது single silver hue நிறத்தில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் எப்போது சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என்பதில் எந்த தகவலும் இல்லை.


LG G Pad 5 10.1-ன் விவரக்குறிப்புகள்

விவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, LG G Pad 5 10.1, Android Pie-யால் இயங்குகிறது. மேலும், 10.1-inch full-HD+ (1920x1200 pixels) IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, 2.34GHz Snapdragon 821 quad-core SoC-யால் இயக்கப்படுகிறது. 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. microSD card-ஐப் பயன்படுத்தி (512GB வரை) விரிவாக்கக்கூடிய ஆப்ஷனும் உள்ளது.

கேமராவைப் பொருத்தவரை, autofocus மற்றும் 5-megapixel செல்ஃபி கேமராவை 8-megapixel ரியர் கேமராவுடன் LG G Pad 5 10.1 tablet வழங்குகிறது. Quick Charge 3.0 உடன் 8,200mAh பேட்டரியை பேக் செய்கிறது. இணைப்பு விருப்பங்களில் Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB Type-C port, 3.5mm audio jack, GPS மற்றும் பல உள்ளன. power மற்றும் volume பொத்தான்களுக்கு அடுத்ததாக டேப்லெட்டின் வலது விளிம்பில் fingerprint சென்சார் அமைந்துள்ளது.

USB Type-C port-ன் இருபுறமும் dual speaker grille உள்ளது. மேலும், பக்கவாட்டில் single SIM tray slot உள்ளது. பரிமாணங்களில் LG G Pad 5 10.1-வானது 247.2x150.7x8mm அளவீடையும் 498 கிராம் எடையையும் கொண்டதாகும்.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.