மார்க் சக்கர்பெர்க் இப்போது உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர்

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
மார்க் சக்கர்பெர்க் இப்போது உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், வாரென் பஃபெட்டை முந்தி உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார். டெக்னாலிஜி தான் உலகை ஆளும் என்று நிரூபித்துள்ள மார்க் சக்கர்பெர்க்கோடு சேர்ந்து, முதல் மூன்று பணக்காரர்களும் டெக் உலகின் வித்தகர்களாவர். முதல் முறையாக முதல் மூன்று இடத்தையும் டெக்னாலஜி நிறுவனர்கள் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதாகும் சக்கர்பெர்க்கின் மதிப்பு இப்போது 81.6 பில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 5.61 லட்சம் கோடி ரூபாய். இது வாரென் பஃபெட்டின் மதிப்பை விட 2,565 கோடி ரூபாய் அதிகம்.

டேட்டா பிரைவஸி பிரச்சனைகளால், ஃபேஸ்புக் பல நெருக்கடிகளை சந்தித்து வந்தபோதும், முதலீட்டாளர்களின் ஆதரவு ஃபேஸ்புக்குக்கு தொடர்ந்து இருந்தது. மார்ச் 27-ம் தேதி, 8 மாதங்களில் இல்லாத அளவு, 152.22 டாலர்களாக குறைந்தது. ஆனால் நேற்று வத்தக நேர முடிவில், ஃபேஸ்புக்கின் பங்குகள் உச்சத்தை தொட்டு, 203.23 (13,975.11) டாலர்களாக உயர்ந்தது.

டாப் 500 உலக் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் புளூம்பர்க் நிறுவனம், இந்த பட்டியலில் டெக் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் மதிப்பு 5 டிரில்லியன் டாலர்கள் (344 லட்சம் ரூபாய்) என்கிறது.

ஒரு காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக இருந்த வாரென் பஃபெட்டின் சொத்து மதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் பல நன்கொடைகளை அவர் செய்து வருவதே அவரது சொத்து மதிப்பு குறைய காரணம். அவரது பெர்க்‌ஷைர் ஹாத்வே நிறுவனத்தில் இருந்த 290 மில்லியன் ஷேர்களை பில் கேட்ஸின் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக அளித்துள்ளார். அவர் கொடுத்த நன்கொடையின் இன்றைய மதிப்பு 3.44 லட்சம் கோடிகள் என்கிறது புளூம்பெர்க். மார்க் சக்கர்பெர்க்கும், தன் வாழ்நாளில், தனக்கு ஃபேஸ்புக்கில் இருக்கும் 99% பங்குகளை நன்கொடையாக அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.