நியூசிலாந்து தாக்குதலுக்கு பிறகு தடை செய்யப்படுமா 'ஃபேஸ்புக் லைவ்'!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
நியூசிலாந்து தாக்குதலுக்கு பிறகு தடை செய்யப்படுமா 'ஃபேஸ்புக் லைவ்'!
ஹைலைட்ஸ்
  • ஃபேஸ்புக் லைவ் அமைப்புக்கு கெடுபுடி!
  • 1.5 மில்லியன் வீடியோக்களை அகற்றியது ஃபேஸ்புக்!
  • இதனால் தனிநபரின் கொள்கைகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

கடந்த வெள்ளியன்று ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பேர்க் ஃபேஸ்புக்கில் பரபலமான 'லைவ்' வசதியை கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

முன்னதாக நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி தனி நபர் ஒருவர் இரண்டு மசூதிகளில் துப்பாக்கி தாக்குதலை நடத்தியதில் 50 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 

இந்த கிரிஸ்ட்ச் சர்ச் படுகொலைக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் சில முக்கிய நபர்கள் மட்டுமே ஃபேஸ்புக் லைவ் வசதியை பயன்படுத்த முடியும் என்ற புதிய விதியை ஃபேஸ்புக் நிறுவனம் அமல்படுத்தவுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இதுவரைக்கும் 900க்கும் மேற்பட்ட வீடியோக்களில் நடந்த அந்த 17-நிமிட கொடூர சம்பவத்தை மீண்டும் வெளியிட்டுள்ளதாகவும், இதை ஃபேஸ்புக் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவியல் கொண்டு அகற்றி வருவதாகவும் தகவல் வெளியானது. 

உலகம் முழுவதும் இதுபோன்ற வெறுப்புகளை பரப்பும் வீடியோக்கள் சுமார் 1.5 மில்லியன் இருப்பதாகவும் இதை தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்