சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது: ISRO

2,379 கிலோ எடை கொண்ட Chandrayaan-2 ஆர்பிட்டரின் பணி ஆயுள் 'ஒரு வருடம்'.

ஹைலைட்ஸ்
 • ஆர்பிட்டர் பேலோடுகள் ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும்
 • ஆர்பிட்டர் எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனை ஆய்வு செய்கிறது
 • 2.1 கி.மீ உயரத்தில் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது

Chandrayaan-2 ஆர்பிட்டர் சந்திர சுற்றுப்பாதையில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று சனிக்கிழமை அதிகாலை சந்திரனின் மேற்பரப்பில் தொடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததை அடுத்து இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார். "ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது, அப்படியே உள்ளது, சந்திர சுற்றுப்பாதையில் சாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுகிறது" என்று அந்த அதிகாரி PTI-க்கு தெரிவித்தார்.

2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டரின் பணி ஆயுள் ஒரு வருடம். ஆர்பிட்டர் பேலோடுகள் 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து ரிமோட் சென்சிங் அவதானிப்புகளை மேற்கொள்ளும். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சந்திரயான் -1 பணிக்கான பின்தொடர்தல் பணியாக சந்திரயான் -2, ஒரு ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்) மற்றும் ரோவர் (பிரக்யன்) ஆகியவற்றைக் கொண்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆர்பிட்டர் சந்திர மேற்பரப்பை வரைபடமாக்குவதற்கு எட்டு விஞ்ஞான பேலோடுகளை சுமந்து, சந்திரனின் வெளிப்புறத்தை (வெளிப்புற வளிமண்டலத்தை) ஆய்வு செய்கிறது.

செப்டம்பர் 2 ஆம் தேதி இஸ்ரோ சந்திரயான் -2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரம் லேண்டரை (ரோவர் பிரக்யனை உள்ளே வைத்திருந்தது) பிரிப்பதை வெற்றிகரமாக மேற்கொண்டது. சனிக்கிழமை அதிகாலையில், விக்ரம் லேண்டரிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல் பரிமாற்றம் சந்திர மேற்பரப்பில் அது இயங்கும் போது இழந்தது, மேலும் இதுகுறித்து தரவு பகுப்பாய்வு செய்யப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

"விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இருந்தது மற்றும் சாதாரண செயல்திறன் 2.1 கி.மீ உயரம் வரை காணப்பட்டது. பின்னர், லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது" என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறினார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் (ISTRAC) உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளெக்ஸில் 'தரவுகள் ஆராயப்படும்' என்று மேலும் அவர் கூறினார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் முகங்களில் ஏமாற்றம் அதிகமாகவே இருந்தது.

விக்ரமின் திட்டமிட்ட தரையிறங்கலை காண வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருக்கு பறந்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் சோர்வடைய வேண்டாம் என்று கூறியதோடு, நாடு அவர்களை கண்டு பெருமை படுவதாகவும் கூறினார். "நான் உங்கள் முகத்தில் ஏமாற்றத்தைக் காண்கிறேன். சோர்வடையத் தேவையில்லை. நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்" என்று பிரதமர் மோடி கூறினார். "இவை தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாங்கள் தைரியமாக இருப்போம்! நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், எங்கள் விண்வெளித் திட்டத்தில் தொடர்ந்து கடினமாக உழைப்போம்".

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. செப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..? - பரபர தகவல்கள்!
 2. Budget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது!!
 3. Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!
 4. டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே!
 5. Pre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு? எங்கு வாங்குவது? முழு விவரம்!
 6. “இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்!
 7. அட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே!
 8. 64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்!
 9. Amazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு!!
 10. முதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன? - முழு விவரம் உள்ளே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.