இஸ்ரோ-வின் சந்திராயன் 2, நாசாவின் ஆராய்ச்சி ஒன்றினை ஏந்திக்கொண்டு விண்ணில் பாயவுள்ளது!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
இஸ்ரோ-வின் சந்திராயன் 2, நாசாவின் ஆராய்ச்சி ஒன்றினை ஏந்திக்கொண்டு விண்ணில் பாயவுள்ளது!

Photo Credit: ISRO

இந்தியாவின் இரண்டாவது சந்திர விண்கோளான சந்திராயன் 2 செயற்கைகோள், ஜூலை மாதம் விண்ணில் பாயவுள்ளது. 13 பேலோட்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு ஆராய்ச்சி ஒன்றையும் ஏந்தி விண்ணில் பாயவுள்ளது இந்த ஏவுகணை. இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அமைப்பு புதன் கிழமையான நேற்று அறிவித்துள்ளது.

13 இந்தியன் பேலோட்கள் (8 ஆர்பிட்டாரிலும், 3 லேண்டரிலும், 2 ரோவரிலும் வைக்கப்பட்டுள்ளது) மற்றும் ஒரு நாசாவின் ஆராய்ச்சியையும் ஏந்தி செல்லவுள்ளது" என்று இஸ்ரோ கூறியுள்ளது. ஆனால் இந்த செயற்கைகோள்கள் எதற்காக என்பதை இன்னும் கூறவில்லை.

ஆர்பிட்டார், லேண்டர்(விக்ரம்) மற்றும் ரோவர்(ப்ரகியன்) என்று மூன்று பகுதிகளை கொண்டுள்ள இந்த சந்திராயன் 2 செயற்கைகோள், 3.8 டன் எடையை கொண்டுள்ளது. இந்த ஏவுகணையில் பொருத்தப்படவுள்ள அனைத்து பகுதிகளும் தயாராகிக்கொண்டுள்ளது என்றும், இந்த ஆண்டு ஜூலை 9-ல் இருந்து ஜூலை 16-ற்குள் விண்ணில் ஏவப்படலாம் எனவும், அதில் நிலவில் செப்டம்பர் 6-ஆம் நாள் தரையிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்த விண்வெளி நிறுவனம் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தது.

இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள ஆர்பிட்டார், நிலவின் மேற்பரப்பிலிருந்து 100கிலோமீட்டர் மேலே நிலவை சுற்றி வட்டமடிக்க போகிறது எனவும், லேண்டர் நிலவில் தரைப்பகுதிக்கு சென்று, நிலவின் தென் துருவத்தின் அருகில் மென்மையாக தரையிறங்கப்போகிறது எனவும், மற்றும் ரோவர், நிலவின் பரப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்போகிறது.

''ஜி எஸ் எல் வி'' எம் கே-III எவுகணையில் வைத்து விண்ணில் ஏவப்படவுள்ள இந்த சந்திராயன் 2 விண்கலத்தில், ஆர்பிட்டார் மற்றும் லேண்டர் ஆகிய பகுதிகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து இந்த ஏவுகணையுனுள் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ரோவர் பகுதி, லெண்டர் பகுதியினுள்ளேயே ஒரு பகுதியாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று பகுதிகளையும் ''ஜீ எஸ் எல் வி'' எம் கே-III எவுகணை புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியில் எடுத்து செல்லும். அதன்பின், இந்த மூன்று பகுதிகளும், இந்த ஏவுகணையிலிருந்து பிரிந்து, ஆர்பிட்டாரின் உந்துவிசை மூலமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்.

அதன்பின் ஆர்பிட்டார் மற்றும் லேண்டர், இரண்டும் பிரிந்து ஆர்பிட்டார் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும். அதே நேரம் லேண்டர், ஆர்பிட்டாரிலிருந்து பிரிந்து, நிலவின் பரப்பை நோக்கி பயணிக்கும். அப்படி பயணிக்கும் லேண்டர் நிலவின் தென் துருவத்தின் அருகில் மென்மையாக தரையிறங்கும். பின் ரோவர், அதிலிருந்து வெளியேறி, நிலவின் பரப்புகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்.

இவ்வாறு கூறியுள்ள இஸ்ரோ நிறுவனம், மேலும், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டிலும் ஆராய்ச்சிக்கான கருவிகளை பொருத்தி விண்ணில் ஏவப்போவதாக குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் கே சிவன், கடந்த ஜனவரி மாதம் கூறுகையில்,"நாங்கள் நிலவில் இதுவரை யாரும் தரையிறங்காத பகுதியில் தரையிறங்கப்போகிறோம்- நிலவின் தென் துருவம், அதுதான் ஆராயப்படாத பகுதி." என குறிப்பிட்டுள்ளார். சந்திராயன் 2 என்பது, இதன் முந்தைய சந்திராயன் 1-ன் மேம்படுத்தப்பட்ட வெர்சன்.

சந்திராயன் 1 பத்து வருடங்களுக்கு முன்னர், விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 11 பேலோட்களை கொண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த சந்திராயன் 1-ல், 5 இந்திய, 3 ஐரோப்பிய, 2 அமெரிக்க, 1 பல்கேரிய பேலோட்கள். இந்த சந்திராயன் 1 நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடிக்க உதவியது. 1.4 டன்கள் எடை கொண்டிருந்த சந்திராயன் 1, பி எஸ் எல் வி ஏவுகணை மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.