விரைவில் அறிமுகமாகிறது அசூஸின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
விரைவில் அறிமுகமாகிறது அசூஸின் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2!

Photo Credit: Asus India

அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 இந்தியாவில் வரும் டிசம். 11ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.

ஹைலைட்ஸ்
  • அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 இந்தியாவில் டிசம்.11ல் அறிமுகம்
  • இந்த ஸ்மார்ட்போனின் முக்கியம்சம் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன
  • இதில் அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2வும் இடம்பெற்றுள்ளது

அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 மற்றும் சென்போன் மேக்ஸ் எம்2 குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இருப்பினும், அசூஸ் இந்தியா, சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ 2 வின் அறிமுக தேதியை மட்டும் உறுதி செய்துள்ளது. சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1-ன் வாரிசாக சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகமாகியுள்ளது.

இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 பிளிப்கார்ட்டில் பிரத்தியோகமாக விற்பனையாகும் என அறிவித்துள்ளது.

சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2

சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 டிசம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. அதில் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பினை பெற்றுள்ளது. இந்தியாவில் அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமானது.


 

cvvb7bsc zenfone max pro m2 625x300 01 December அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்நாப்டிராகன் 660SoCல் இயங்குகிறது.
 

 

m4oa9164 zenfone max m2 625x300 01 December

 

அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2வின் முக்கியம்சங்கள்

அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2வில் நாட்ச் சற்று பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசூஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2வில் ஸ்நாப்டிராகன் 660 SoCல் இயங்குகிறது. 6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. 4ஜிபி. 6ஜிபி மற்றும் 8ஜிபி வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பின்புறம் இரட்டை கேமிரா உள்ளது. 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் சென்சார்களைக் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்