இந்தியாவில் நவ.22ல் அறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் நவ.22ல் அறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ!

ரெட்மி நோட் 6 ப்ரோவின் இந்திய விலை டி.ஹெச்.பி 6,990க்கு இணையாக (ரூ.15,300) இருக்கும்.

ஹைலைட்ஸ்
  • சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ தாய்லாந்தில் செப்டம்பர் மாதத்தில் வெளியானது.
  • இந்தியாவில், அடுத்தவாரம் நடைபெறவுள்ள நோட் ப்ரோ 6 வெளியீட்டிற்கு அழைப்பு வ
  • ரெட்மி நோட் 6 ப்ரோ பிரபலமான ரெட்மி நோட் 5 ப்ரோவின் அடுத்த மாடலாகும்.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த வெளியீட்டு விழா குறித்து ஊடகங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த போன் வெளியாகிறது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி நோட் 6 ப்ரோ பிரபலமான ரெட்மி நோட் 5 ப்ரோவின் அடுத்த மாடலாகும்.

சியோமியின் உலகளாவிய துணை தலைவர் மற்றும் சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் தனது டிவிட்டர் பதிவில், நவம்.22 ஆம் தேதி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகமாகிறது என்ற செய்தியோடு கவுண்டவுன் பக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் இந்திய விலை,

செப்டம்பர் மாதம் தாய்லாந்தில், ரெட்மி நோட் 6 ப்ரோ 4ஜிபி ரேம்/64ஜிபி வேரியண்ட் அறிமுகப் படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 6 ப்ரோவின் அறிமுக விலை தாய்லாந்தில் டி.ஹெச்.பி 6,990 ஆகும். அதன் இந்திய மதிப்பு ரூ.15,300 ஆகும்.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் முக்கியம்சங்கள்,

இரட்டை சிம் வசதி கொண்ட ரெட்மி நோட் 6 ப்ரோ MIUI ஓரியோ ஆண்ட்ராய்டில் இயங்குகிறது. 6.26 இன்ச் ஹெச்.டி + திரை 19:9 என்ற வீதத்தில் இருக்கும். கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 14nm அக்டோ- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC மற்றும் அட்ரினோ 509 GPU,4ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் பின்புறம் இரண்டு கேமிராக்கள் உள்ளன. அதில் 12மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் உள்ளது. இதில் இருக்கும் 4000mAh பேட்டரி 2 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.