ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களில் Mi CC9-ன் 'ஸ்கை ஃபில்டர்'!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களில் Mi CC9-ன் 'ஸ்கை ஃபில்டர்'!

Photo Credit: Weibo/ Lu Weibing

Redmi K20: இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ஹைலைட்ஸ்
 • இந்த வசதி உங்கள் புகைப்படங்களை எடிட் செய்துகொள்ள உதவும்
 • கேளரியில் இந்த வசதி இடம் பெற்றுள்ளது
 • ரெட்மீ K20 ஸ்மார்ட்போன்கள், ஜூலை 17-ல் இந்தியாவில் அறிமுகம்

Xiaomi Redmi Smartphones: இந்தியாவில் 'ரெட்மீ K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள் ஜூலை 17 அன்று அறிமுகமாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் நடைபெறவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு, ஜூலை 12 முதலிருந்தே முன்பதிவு துவங்குகிறது என இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து தினம் தினம் வெளியிடும் தகவல்களில் இன்று ஒரு புதிய தகவல்.இணைந்துள்ளது. அது என்னவென்றால், Mi CC9 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள 'ஸ்கை பில்டர்', இந்த ரெட்மீ ஸ்மார்ட்போன்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதி எப்படி வருகிறது என்பது தெளிவாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ரெட்மீ நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், தனது வெய்போ கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் 'ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களில் 'ஸ்கை ஃபில்டர்' இடம்பெறவுள்ளது. 

இந்த வசதி உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ளாதா என்பதை தெரிந்துகொள்ள முதலில் கேளரிக்குள் செல்லுங்கள். வானம் பின்புறத்தில் உள்ளது போன்ற ஒரு புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். பின் அந்த புகைப்படத்திற்கான 'எடிட்' வசதியை தேர்வு செய்யுங்கள். அதில் வரும் முன்னமைவுகளை (presets) ஸ்க்ரால் செய்து பாருங்கள். எது பொருந்துகிறதோ, அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதில் அந்த 'ஸ்கை ஃபில்டர்'-ரின் அளவை நாம் சரி செய்துகொள்ளவும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சீனாவில் வெளியான Mi CC9 ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகிறது எனபது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

கடந்த மே மாதம் சீனாவில் வெளியான 'ரெட்மீ K20, K20 Pro' ஸ்மார்ட்போன்கள், ஜூலை 17 அன்று இந்தியா அறிமுகமாகவுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 12 அன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi தளங்களில் துவங்கவுள்ளது. 855 ரூபாய் கொடுத்து, இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
 2. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
 3. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
 4. நோக்கியா வெளியிடும் முதல் ஆண்ட்ராய்டு போன்..!?- பரபர தகவல்கள்
 5. இன்று வெளியாகிறது ‘ஒப்போ K3’: எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 6. சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
 7. தொடரும் ‘ரெட்மீ K20’ விலை சர்ச்சை: மனம் திறந்த சியோமி நிறுவனம்!
 8. இந்தியாவில் நெட்பிளிக்ஸின் குறைந்த விலை 'மொபைல் ஒன்லி' திட்டம்!
 9. வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?
 10. இன்று துவங்குகிறது 'ரியல்மீ X'-ன் 'ஹேட்-டூ-வெய்ட்' சேல்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.