அறிமுகமானது சியோமி Poco F1; ஆகஸ்ட் 29 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அறிமுகமானது சியோமி Poco F1; ஆகஸ்ட் 29 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை
ஹைலைட்ஸ்
 • 8ஜிபி ரேம் உள்ள போன்களை F1 மாடலில் சியோமி போக்கோ அறிமுகப்படுத்தியுள்ளது
 • இவற்றின் விலை 30,000க்கும் கீழாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 • ஆகஸ்ட் 29 முதல் இவை விற்பனைக்குக் கிடைக்கும்

 

சியோமியின் துணை நிறுவனமான போக்கோவின் முதல் திறன்பேசியான போக்கோ F1 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சியோமியின் தயாரிப்பு மேலாளரான ஜெய் மணி இன்று டெல்லியில் இதை அறிமுகப்படுத்தினார். மூன்று வகையான F1 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 8ஜிபி ரேமும் 256 ஜிபி இன்டர்னல் மெமரியும் உள்ளது. லிக்விட் கூல் தொழில்நுட்பத்துடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC, 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, ஆகியவை இதன் பிற சிறப்பம்சங்கள். இதனை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். ஆச்சரியமாக இப்போனின் விலை முப்பதாயிரத்துக்குக்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Xiaomi Poco F1 விலை:

சியோமி போக்கோ F1இன் விலை இந்தியாவில் 20,999 ரூபாயில் இருந்து (6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி) தொடங்குகிறது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடனான போனின் விலை 23,999 ரூபாய். 8ஜிபி ரேம்/256ஜிபி மெமரியுடனான போனின் விலை 28,999 ரூபாய். பாலிகார்பனேட்டாலான பின்பக்க கேசுடன் rosso red, steel blue & graphite black ஆகிய மூன்று நிறங்களில் இப்போன்கள் கிடைக்கின்றன. மேலும் ‘armoured edition’ என்ற பெயரில் கெவ்லார் இழையுடனான சிறப்புப் பதிப்பு ஒன்று 29,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆகஸ்ட் 29 பிற்பகல் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட், MI.com தளங்களில் இப்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

 

எச்டிஎப்சி க்ரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்வோர்க்கு 1000ரூபாய் உடனடி கழிவு கிடைக்கும். மேலும் ஆறு டிபி டேட்டா, 8000ரூபாய் மதிப்பிலான இதர சலுகைகளுடன் கூடிய ஜியோவின் அறிமுக ஆஃபரும் உள்ளது. போனின் பெட்டியிலேயே ஒரு soft case தரப்படுகிறது. இதுபோக 399ரூபாய்க்கு hard caseஉம் கிடைக்கும். கெவ்லார் இழையாலான armoured case 799ரூபாய்க்குக் கிடைக்கும். வேறு வகையான சிலிக்கான் கேஸ்களும் 299ரூபாய்க்குக் கிடைக்கும். புதிய துணை நிறுவனம் என்றாலும் சியோமியின் சேவை மையங்களிலேயே போக்கோ போன்களை சர்வீஸ் செய்துகொள்ளலாம்.

போக்கோ F1 திறன் குறிப்பீட்டு விவரங்கள்:

டூயல் நானோ சிம் (ஹைப்ரிட்), ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பத்தை அடிப்படியாகக் கொண்ட MIUI 9.6 இடைமுகம், 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, 2.D கொரில்லா கிளாஸ் 3, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC ஆகியவற்றைக் கொண்டுள்ளது . ஆண்டிராய்டு அப்டேட்டும் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,000mAh பேட்டரியுடன், டூயல் கேமரா, 12 மெகா-பிக்சல் ப்ரைமரி, 5 மெகா-பிக்சல் செகண்டரி கேமரா உள்ளன. வழக்கமான MIUI இடைமுகத்தை மாற்றி ஆண்டிராய்டு இடைமுகத்தை ஒத்ததாக போக்கோ லான்ச்சர் உள்ளது. நோட்டிபிகேசன்களின் தோற்றமும் சிறிது மாறுதலோடு விரைவான இடைமுகத்தைக் கொண்டிருக்கும்.

அகச்சிவப்புக் கதிர்களால் செயல்படும் ஃபேஸ் அன்லாக், செயற்கை நுண்ணறி அழகூட்டு தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளன. கேமராவின் செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் இந்தியாவுக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

xiaomi poco f1 back gadgets 360 Xiaomi Poco F1

64ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என மூன்று வகை மெமரி ஆப்சன்களோடு இப்போன் கிடைக்கிறது. தனியாக மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதலாக நீட்டித்துக்கொள்ளவும் முடியும். 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத், v5.0, USB Type-C, 3.5மிமீ ஆடியோ ஜாக், accelerometer, ambient light sensor, digital compass, gyroscope, and proximity sensor ஆகிய சென்சார்கள் என கனக்டிவிட்டி ஆப்சன்கள் நீள்கின்றன. 18W சார்ஜிங் சப்போர்ட், குவிக் சார்ஜ் 3 ஆகியவற்றுடன் கூடிய 4000mAh பேட்டரியும் இதன் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 25x ஜூம் திறனுடன் Redmi Note 8 Pro!
 2. அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள புதிய ரியல்மீ ஸ்மார்ட்போன்!
 3. சூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா? - ஆராயத் தயாராகிறது நாசா!
 4. 9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!
 5. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
 6. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
 7. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
 8. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 9. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
 10. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.