சியோமியின் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக 'Mi CC9 மற்றும் Mi CC9e', இன்று அறிமுகமாகிறதா?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
சியோமியின் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக 'Mi CC9 மற்றும் Mi CC9e', இன்று அறிமுகமாகிறதா?

Photo Credit: Twitter/ Xiaomishka

மெய்ட்டு நிறூவனத்தின் கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ள சியோமி ஸ்மார்ட்போன்கள்

ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று சீனாவில் அறிமுகமாகிறது
  • Mi CC9 ஸ்மார்ட்போன் ஆசுஸ் ஜென்போன் 6 போன்று ஃப்ளிப் கேமரா கொண்டிருக்கலாம்
  • வாட்டர் ட்ராப் நாட்ச் கேமராவுடன் Mi CC9e ஸ்மார்ட்போன் வெளியாகலாம்

சியோமி நிறுவனம் புதிது புதிதாக ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளது. இன்னிலை, சியோமி நிறுவனம் மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று, ஒரு புது தொடரில் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வமான வெய்போ பக்கத்தில் வெளியிட்டுள்ளது சியோமி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்ச்சி இந்திய நேரப்படி, காலை 7:30 மணிக்கு நடைபெரும். தனது வெய்போ பக்கத்தில் சியோமி வெளிட்டிருந்த டீசர்களை வைத்து பார்க்கையில், மெய்ட்டு (Meitu) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஸ்மார்ட்போன்களை, சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெய்ட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வெய்போ கணக்கிலுருந்தும் சியோமியின் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது வெய்போ கணக்கு பதிவில், சியோமி நிறுவனம் இன்று காலை இரண்டு புதிய ஸ்மார்டபோன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என கூறியிருந்தது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட அனைவராலும் இந்த செய்தி பரவால பகிரப்பட்டது. 

இன்று வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவலின்படி, இன்று சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் Mi CC9 மற்றும் Mi CC9e-யாக இருக்கலாம். செல்பி கேமராவில் கவணம் செலுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள், மெய்ட்டு நிறூவனத்தின் கேமராக்கள் பொருத்தப்பட்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Mi CC9 ஸ்மார்ட்போன் பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மேலும், சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆசுஸ் ஜென்போன் 6 போன்று ஃப்ளிப் கேமரா கொண்டு வெளியாகலாம். மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் போன்ற அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களை மையப்படுத்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், அவர்களை கவரும் வகையில் பின்க் நிற வண்ணம் கொண்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இன்-டில்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் கொண்டிருக்கலாம்.

Mi CC9e ஸ்மார்ட்போன் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ஸ்னெப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டிருக்கும். 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் மூன்று பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் ஃப்ளிப் கேமரா பொருத்தப்படாமல், வாட்டர் ட்ராப் நாட்ச் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனும் இன்-டில்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகலாம்.

mi cc9e tenna Mi CC9e

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.