அதிரவைக்கும் சியோமியின் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அதிரவைக்கும் சியோமியின் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர்!

ஆண்ட்ராய்டு 9-ல் செயல்படும் சியோமியின் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர்!

சியோமியின் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர் வகை ஃபோனின் முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. பிளாக் ஷார்க் ஃபோனுக்குப் பின்னர் சியோமியின் அடுத்த அறிவிப்பாக இருந்த இந்த ஃபோன் ஸ்னாப் டிராகன் 855 எஸ்.ஓ.சி மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டது. 

சியோமியின் மற்றொரு வெளியீடான சியோமி எம்.ஐ 9 சீபேயிஸ்யின் அமைப்புகளைப் போலவே உள்ள நிலையில் நினைவகத்தின் அளவு மட்டும் மாறி இருக்கிறது. நாளை சீனாவில் சியோமியின் மற்றொரு ஃபோன் வெளியாகும் நிலையில் இந்த தகவல் இணையதளங்களில் கசிந்துள்ளது.

ஆண்ட்ராய்டு பை-யில் இயங்கும் இந்த சியோமியின் பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர் கடந்த அக்டோபர் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வெளியாகாததால் உலகம் முழுவதும் ஓரே நேரத்தில் பிளாக் ஷார்க் மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதையொட்டி இந்த ஃபோனும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓன்பிளஸ் 7, சோனி எக்ஸ்பிரியா XZ4 மற்றும் சாம்சங் கிளாக்சி s10 போன்ற ஃபோன்களுடன் வெளியாகும் புதிய பிராசஸரைக் கொண்ட இந்த பிளாக் ஷார்க் ஸ்கைவால்கர் இந்தியாவில் சுமார் 31,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.99 இஞ்ச் அளவு டிஸ்பிளே கொண்டு இந்த ஃபோன் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டது. 12 மட்டும் 20 மெகா பிக்சல்களை கொண்டுள்ள இந்த கேமரா 64 ஜிபி மற்றும் 128 ஜிபி நினைவகத்தைக் கொண்டது.
 சுமார் 4,000mAh பேட்டரி பவர் கொண்ட இந்த ஃபோன் 190 கிராம் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.