ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகமாக இருக்கும் சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகமாக இருக்கும் சியோமி 'ப்ளாக் ஷார்க் 2': விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

சியோமியின் 'ப்ளாக் ஷார்க் 2'

ஹைலைட்ஸ்
  • மே 27 அன்று ஃப்ளிப்கார்ட்டில் வெளியாகவுள்ளது.
  • கேமிங்கிற்காகவே பிரத்யேகமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது
  • ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

பல பட்ஜெட் போன்களை தாண்டி சில ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது சியோமி நிறுவனம். அவைகளில் ஒன்று தான் இந்த 'ப்ளாக் ஷார்க்'. இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்காகவே பிரத்யேகமாகவே தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 'ப்ளாக் ஷார்க் 2' என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது சியோமி நிறுவனம். மே 27 அன்று அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட்டில் வெளியாகவுள்ளது. இதை இன்ஸ்டாகிராமின் ஒரு விளம்பரத்தின் வாயிலாக உறுதி படுத்தியுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். மேலும் அந்த விளம்பரத்தில் கூகுள் மற்றும் போகோ போன்கள் பற்றிய தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

'ப்ளாக் ஷார்க் 2': இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

4 வகைகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமானது. அதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' 3,199 யுவான் (32,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமானது. இதன் மற்ற வகைகளான 8GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 3,499 யுவான்கள் (35,300 ரூபாய்) எனவும், 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2' விலை 3,799 யுவான்கள் (38,300 ரூபாய்) எனவும் விற்பனை ஆனது.

xiaomi black shark 2 flipkart gadgets 360 xiaomi

மேலும், மற்றொரு வகையான 12GB RAM + 256GB சேமி ப்பு அளவு கொண்ட 'ப்ளாக் ஷார்க் 2'-வின் விலை 4,199 யுவான்கள் (42,400 ரூபாய்). கருப்பு (Shadow Black) மற்றும் சில்வர் (Frozen Silver) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது.

'ப்ளாக் ஷார்க் 2' வகை 'ப்ளாக் ஷார்க் 2' விலை
6GB/ 128GB 3,199 யுவான்கள் (32,300 ரூபாய்)
8GB/ 128GB 3,499 யுவான்கள் (35,300 ரூபாய்)
8GB/ 256GB 3,799 யுவான்கள் (38,300 ரூபாய்)
12GB/ 256GB 4,199 யுவான்கள் (42,400 ரூபாய்)

ப்ளாக் ஷார்க் 2': சிறப்பம்சங்கள்

இரண்டு சிம் வசதிகளை கொண்ட இந்த 'ப்ளாக் ஷார்க் 2' 6.39-இன்ச் FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் மற்றும் 403ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூல் 3.0 (Liquid Cool 3.0) தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதனால், மற்ற ஸ்மார்ட்போன்களை விட, இதில் வெப்பத்தை வெளிக்கடத்தும் திறன் 20 மடங்கு வரை அதிகமாக இருக்கும்.

கேமரா பற்றி பேசுகையில், இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த 'ப்ளாக் ஷார்க் 2'. 48 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த கேமராக்கள். மேலும், 20 மெகாபிக்சல் அளவிலான முன்புற கேமராவை கொண்டுள்ளது. 

4,000mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும், 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  2. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  3. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  4. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  5. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  6. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  7. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  8. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
  9. இந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை?
  10. Flipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை?
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.