3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’!

Photo Credit: Weibo

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வகைகளில் இந்த போன் கிடைக்கும்

ஹைலைட்ஸ்
  • Vivo Z5-யில் இன்-டிஸ்ப்ளே சென்சார் இருக்கும் எனத் தெரிகிறது
  • 6 மற்றும் 8ஜிபி ரேம் வகைகளில் இந்த போன் வெளிவரலாம்
  • கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் இந்த போன் வர வாய்ப்புள்ளது

தனது Z வரிசை போன்களின் அடுத்த படைப்பான Z5-ஐ அறிமுகம் செய்ய உள்ளது விவோ நிறுவனம். வரும் ஜூலை 31 ஆம் தேதி இந்த போன் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சீனாவில் இந்த போன் ரிலீஸுக்கான நிகழ்ச்சி நடத்தப்படும். இதுவரை விவோ Z5 குறித்து வெளியிடப்பட்டுள்ள டீசரை வைத்துப் பார்க்கும்போது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 3 ரியர் கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. TENAA தளத்திலும் விவோ Z5 குறித்த சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

vivo Z5  tenaa Vivo

TENAA தளத்திலும் விவோ Z5 குறித்த சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Photo Credit: TENAA

TENAA பட்டியல்படி, விவோ Z5 போனில் 6.38 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 4,420 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கும் எனத் தெரிகிறது. 159.53 x 75.23 x 8.13 எம்.எம் டைமன்ஷனில் இந்த போன் வடிவமைப்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இந்த போன் பவரூட்டப்பட்டுள்ளது. கோல்டு, கருப்பு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். 

6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வகைகளில் இந்த போன் கிடைக்கும். அதேபோல 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகள் ஆப்ஷன் இருக்கும். கேமராக்களைப் பொறுத்தவரை, விவோ Z5-யில் 3 பின்புற கேமராக்கள் இருக்கும். 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவும், 8 மற்றும் 2 மெகா பிக்சல் திறன் கொண்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கேமராக்களும் கொடுக்கப்பட்டிருக்கும். 32 மெகா பிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமராக்கள் மூலம் துள்ளியமான முன்புற போட்டோகளும் எடுக்க முடியும். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.