டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே!

செல்ஃபி கேமரா மூலம் ‘சூப்பர் நைட் செல்ஃபி’-களை க்ளிக் செய்ய முடியும்.

ஹைலைட்ஸ்
  • Vivo V17 Pro-வில் 18W டூயல்-இன்ஜின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது
  • 4,100 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் பவரூட்டப்பட்டுள்ளது V17 ப்ரோ
  • ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 10% கேஷ்-பேக்

விவோ நிறுவனம் அதன் V17 ப்ரோ ஸ்மார்ட் போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய போனில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளது. அதில் 32 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவும், 8 மெகா பிக்சல் கொண்ட வைட் ஆங்கில் கேமராவும் அடங்கும். V15 ப்ரோ-வின் அடுத்த வெர்ஷனாக வந்துள்ள V17 ப்ரோவில் 4 பின்புற கேமரா உள்ளது. ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி ப்ராசஸர் மூலம் இந்த போன் பவரூட்டப்பட்டுள்ளது. 

விவோ V17 ப்ரோ விலை மற்றும் அறிமுக ஆஃபர்:

V17 ப்ரோவின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 29,990 ரூபாயாகும். மிட்நைட் கடல் மற்றும் க்ளேஷியர் ஐஸ் வண்ணங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கும். தற்போது V17 ப்ரோவை ப்ரி ஆர்டர் செய்யலாம் என்றாலும், செப்டம்பர் 27 ஆம் தேதியில் இருந்துதான் விற்பனைக்கு வரும். விவோ இ-ஷாப், ஃப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால் மற்றும் டாடா கிளிக் ஆகியவற்றில் கிடைக்கும். அறிமுக தள்ளுபடியாக, எக்ஸ்சேஞ்சுக்கு 2,000 ரூபாய் விலை குறைக்கப்படும். ஐசிஐசிஐ அல்லது எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், 10 சதவிகித கேஷ்-பேக் கொடுக்கப்படும். அதனுடன் கட்டணமில்லா இ.எம்.ஐ மற்றும் ஒரு முறை ஸ்க்ரீன் மாற்றல் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. 

vivo v17 pro body Vivo V17 Pro

VV17 ப்ரோவின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 29,990 ரூபாயாகும்

விவோ V17 ப்ரோ சிறப்பம்சங்கள்: 

டூயல் சிம் V17 ப்ரோவில், ஆண்ட்ராய்டு 9 பைய் ஃபன்டச் ஓ.எஸ் 9.1 மென்பொருள், 6.44 இன்ச் முழு எச்.டி+ சூப்பர் ஆமொலெட் டிஸ்ப்ளே, 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட அட்டகாச வசதிகள் இருக்கின்றன.

V17 ப்ரோ, குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி, 8ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி அம்சங்கள் கூடுதல் பலத்தை சேர்க்கிறது. பின்புற கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கில் கேமரா, 13 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கொண்ட சூப்பர் வைட்- ஆங்கில் கேமரா இருக்கின்றன. இந்த செல்ஃபி கேமரா மூலம் ‘சூப்பர் நைட் செல்ஃபி'-களை க்ளிக் செய்ய முடியும். இன்-டிஸ்ப்ளே கொண்ட ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் போனில் இருக்கிறது. 

4,100 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் பவரூட்டப்பட்டுள்ள V17 ப்ரோவில், 18W டூயல்-இன்ஜின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது. 4ஜி எல்.டி.இ இணைப்பு, ப்ளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வை-ஃபை, ஜிபிஎஸ், பெய்டு உள்ளிட்ட இணைப்புகளுக்கான வசதி இருக்கின்றன. 
  

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.