அட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே!

4,100 எம்.ஏ.எச் பேட்டரி வசதியையும் V17 பெற்றிருக்கும் எனப்படுகிறது. 

ஹைலைட்ஸ்
  • Vivo V17 Pro இன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது
  • இந்த போனில் பிரத்யேக 'சூப்பர் நைட் செல்ஃபி மோட்' இருக்கும்
  • அதேபோல 'சூப்பர் வைட் செல்ஃபி மோட்' ஆப்ஷனும் இருக்கும்

விவோ V17 ப்ரோ ஸ்மார்ட் போன், இன்று இந்தியாவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் அந்த போனின் அட்டகாச சிறப்பம்சங்கள் குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம், டீசர் பக்கம் மூலம் ஹின்ட் கொடுத்துள்ளது. விவோ ஆன்லைன் ஸ்டைரைத் தவிர்த்து, ஃப்ளிப்கார்ட் தளத்தில் V17 கிடைக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும் போனில் 4 பின்புற கேமரா இருக்கும் என்றும், 48 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என்றும் வெளியிடப்பட்டுள்ள டீசர் பக்கம் மூலம் அரிய முடிகிறது. அதைத் தவிர ‘சூப்பர் நைட் செல்ஃபி மோட், ‘சூப்பர் வைட் ஆங்கில் செல்ஃபி மோட்' வசதிகளும் V17-ல் இருக்கும். 

இன்று மதியம் 12 மணிக்கு விவோ V17 ரிலீஸ் செய்யப்படும் இந்த போனில் செல்ஃபிகளுக்காக டூயல் பாப்-அப் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

விவோ V17 ப்ரோ சிறப்பம்சங்கள் (சொல்லப்படுபவை):

விவோ V17 ஸ்மார்ட் போனில், டூயல் சிம் நானோ சிம் கார்டு ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள், 6.44 இன்ச் முழு எச்.டி+ சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே, 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஒ.சி ப்ராசஸர், 8ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செல்ஃபிகளுக்கு டூயல் பாப்-அப் கேமரா இருக்கும் என்றும், அதில் 32 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவும் 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராவும் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

பின்புறம் கேமராவைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கில் கேமரா, 13 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ், 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. 

மேலும் 4,100 எம்.ஏ.எச் பேட்டரி வசதியையும் V17 பெற்றிருக்கும் எனப்படுகிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.