'பாப் அப்' செல்ஃபி கேமராவுடன் வெளியான 'விவோ வி15'... முக்கிய தகவல்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'பாப் அப்' செல்ஃபி கேமராவுடன் வெளியான 'விவோ வி15'... முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் விவோ வி15 ஸ்மார்ட்போன் ரூ.24,500க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • இரண்டு நிறங்களில் தாய்லாந்தில் விவோ வி 15 ஸமார்ட்போன் அறிமுகம்!
  • 'பாப் ஆப்' செல்ஃபி கேமராவை கொண்டுள் விவோ வி 15 தயாரிப்பு!
  • பின்புறத்தில் மூன்று கேமராக்களை இந்த போன் கொண்டுள்ளது.

இந்தியாவில் விவோ வி15 ப்ரோ வெளியானதைத் தொடர்ந்து தாய்லாந்தில் தற்போது விவோ வி15-ஐ அறிமுகமாகியுள்ளது. 6ஜிபி ரேம், பாப் அப் செல்ஃபி கேமராக்கள் மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் என பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது இந்த போன்.

விவோ வி 15 ப்ரோவைபோல் இல்லாமல் இந்தத் தயாரிப்பில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பின்புறத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான விவோ வி15 ப்ரோ (ரூ.28,990) ஸ்மார்ட்போனுக்குப் பிறகு விரைவில் விவோ வி15 வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.

விவோ வி15 விலை (தாய்லாந்து):

தாய்லாந்தில் அறிமுகமாகியுள்ள விவோ வி15 ஸ்மார்ட்போன் ரூ.24,500 மதிப்புடையது. டோபாஸ் ப்ளூ மற்றும் கேளமர் ரெட் நிறங்களில் வெளியாகியுள்ள இந்தத் தயாரிப்புகள் கிரேடியன்ட் ஃபினிஷிங்கை பெற்றுள்ளது. தாய்லாந்தில் விற்பனைக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மலேசியாவில் இந்தத் தயாரிப்பின் விலை மற்றும் அமைப்புகளின் தகவல் ஏதுமின்றி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

vivo v15 blue Vivo V15

விவோ வி15 ஸ்மார்ட்போனின் அமைப்புகள்:

இரண்டு (நேனோ) சிம் ஸ்லாட்களை கொண்டுள்ள விவோ வி15 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 9.0 மற்றும் ஃபன்டச் மென்பொருளால் இயங்குகிறது.

6.53 இஞ்ச் திரை கொண்ட இந்தத் தயாரிப்பு ஆக்டா கோர் மீடியா டெக்ஹூலியோ P70 SoC பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த மாடல், செல்ஃபிகளுக்காக முன்பறத்தில் 32 மெகா பிக்சல் பாப் அப் செல்ஃபி கேமராக்களை கொண்டுள்ளது.

பின்புறத்தில் மூன்று கேமராக்கள் அமைந்துள்ள நிலையில் அவைகள் 12 / 8 / 5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளன. இதனால் முக்கிய அம்சங்களான ஹெச்டிஆர் புகைப்படங்கள், போக்கே மோட் (bokeh mode) மற்றும் முகத்தை வைத்து போனை அன்லாக் செய்யும் வசதி என பலவும் இடம்பெற்றுள்ளன.

128 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், டூயல் எஞ்ஜின் விரைவு சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது. 4,000mAh பேட்டரி வசதியுடன் வெளியான விவோ வி15, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.