அமேசான் ‘எர்த் வீக் சேல்’… அட்டகாச ஆஃபர்களில் முன்னணி ஸ்மார்ட் போன்கள்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அமேசான் ‘எர்த் வீக் சேல்’… அட்டகாச ஆஃபர்களில் முன்னணி ஸ்மார்ட் போன்கள்!

ஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு ஈ.எம்.ஐ போட்டு பொருட்களை வாங்கினால், இந்த விற்பனையில் 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி, ‘உலக தினம்' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமேசான் நிறுவனம் ‘எர்த் வீக் சேல்' கொண்டாடுகிறது. இந்த விற்பனையின் மூலம் பயன்படுத்தப்பட்ட பல முன்னணி ஸ்மார்ட் போன்கள், லேப்டாப், ஹெட் போன்ஸ் மற்றுப் பல சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று ஆரம்பிக்கும் இந்த சேல், 22 ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த எர்த் வீக் சேல் மூலம், அமேசான் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட சியோமி Mi A2 போனை 9,899 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் மார்க்கெட் விலை 17,499 ரூபாய் ஆகும். ரெட்மி நோட் 6 ப்ரோ தள்ளுபடி போக 10,699 (எம்.ஆர்.பி ரூ.12,999) ரூபாய்க்கு கிடைக்கிறது. ரியல்மி U1, தள்ளுபடி போக 8,999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.11,999). 

அமேசான் ரின்யூட் ப்ரோக்ராமிற்கு கீழ் இந்த தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியில் வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் 6 மாத வாரன்டி கொடுக்கப்படுகிறது. 

மொத்தம் 9 நாடுகளில் இதைப் போன்ற தள்ளுபடி விற்பனையை அமேசான் நிறுவனம் நடத்தி வருகிறது. 2017-ல் இந்தத் திட்டம் முதன்முறையாக இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் 6,000 வெவ்வேறு வகையிலான பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக அமேசான் கூறுகிறது. 

போன்கள் மட்டுமல்ல இன்டெல் கோர் i5 ப்ராசஸர் லேப்டாப்கள் 19,990 ரூபாய்க்கும், இன்டெல் கோர் i7 ப்ராசஸர் லேப்டாப்கள் 23,990 ரூபாய்க்கும் இந்த சேல் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசானின் ஃபயர் ஸ்டிக், அமேசான் எக்கோ, அமேசான் எக்கோ டாட் போன்ற அமேசானின் பொருட்களும் இந்த சேலில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பீக்கர்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு ஈ.எம்.ஐ போட்டு பொருட்களை வாங்கினால், இந்த விற்பனையில் 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.