சியோமிக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ கேமோன் i4!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சியோமிக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ கேமோன் i4!

டெக்னோ கேமோன் i4 ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.9,599க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரூ.9,599க்கு விற்பனை செய்யப்படும் டெக்னோ கேமோன் i4!
  • இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் வசதியை பெற்றுள்ளது.
  • டெக்னோ கேமோன் i4 இந்தியாவில் கடைகள் மூலமே வெளியாகுகிறது.

டெக்னோ கேமோன் i4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பை டிரான்ஸ்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மூன்று பின்புற கேமராக்கள், ஆண்ட்ராய்டு 9 பைய், ஃபேஸ் ஆன்லாக், 6.2 இஞ்ச் ஹெச்டி திரை போன்ற பல அமைப்புகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ரெட்மி நோட் 7 தயாரிப்புக்கு போட்டியாக திகழ்கிறது.

டெக்னோ கேமோன் i4 விலை மற்றும் ஆஃபர்கள்:
டெக்னோ கேமோன் i4 ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.9,599க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இந்த தயாரிப்பின் 3ஜிபி ரேம்/ 32ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.10,599-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே மாடலின் 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் போன்கள் அக்குவா புளூ, சேம்பேயின் கோல்டு, மிட்நைட் பிளாக் மற்றும் நெபுலே பிளாக் நிறங்களில் வெளியாகுகிறது. அறிமுக சலுகையாக இந்த போனிற்கு ஒரு முறை இலவசமாக ஸ்க்ரீன் மாற்றும் வசதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 நாட்கள் இலவச ரீப்பிலேஸ்மென்ட் வசதி மற்றும் 1 மாதத்திற்கான வாரன்டி காலமும் நீடிக்கப்பட்டுள்ளது. 

டெக்னோ கேமோன் i4 அமைப்புகள்:
இரண்டு சிம்கார்ட்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் ஆண்ட்ராய்டு 9 பைய் கொண்டு இயங்குகிறது. 6.2 இஞ்ச் ஹெச்டி திரை, வாட்டர்டிராப் மாடல் திரை மற்றும் 2ஜிபி அல்லது 3ஜிபி ரேம் வசதிகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த போனில் இடம்பெற்றுள்ள மீடியாடெக் ஹீலியோA22 SoC இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இந்த தயாரிப்பின் 4ஜிபி மாடல் ஸ்மார்ட்போன், மீடியாடெக் ஹீலியோ P22 SoC பிராசஸ்சரை கொண்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் 13/8/2 மெகா பிக்சல் சென்சார்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் சிறப்பு கேமரா வசதிகளான ஹெச்டிஆர் அமைப்பு, போக்கே மோட் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கும் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த போனின் முன்புறத்தில் 16 மெகா-பிக்சல் செல்ஃபி கேமரா அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.