இன்று வெளியாகவுள்ள சாம்சங் 'கேலக்சி M40': விலை என்னவாக இருக்கும்?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இன்று வெளியாகவுள்ள சாம்சங் 'கேலக்சி M40': விலை என்னவாக இருக்கும்?

இன்று வெளியாகவுள்ள சாம்சங் கேலக்சி M40

ஹைலைட்ஸ்
  • சாம்சங் 'கேலக்சி M40' இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது
  • சாம்சங் M தொடரில், இது நான்காவது ஸ்மார்ட்போன்
  • இந்த ஸ்மார்ட்போன் அமேஸானில் விற்பனைக்கு வரவுள்ளது

இந்தியாவில் சாம்சங் 'கேலக்சி M40' இன்று அறிமுகமாகவுள்ளது. இந்த 'கேலக்சி M40' ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு ஜூன் 11-ஆன இன்று மாலை 6 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி முன்னதாகவே சாம்சங் நிறுவனம் பல டீசர்களை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படியில், இந்த ஸ்மார்ட்போன் இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களுடன் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த டீசர்களில், சாம்சங் நிறுவனம் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொன்ற அம்சங்களை கொண்டுள்ளது என்பதை தெரிவித்திருந்தது. சாம்சங் M தொடரில், இது நான்காவது ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாம்சங் 'கேலக்சி M40': அறிமுக நிகழ்வு!

சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், ஜூன் 11-ஆம் தேதியான் இன்று மாலை 6 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள கேட்ஜெட்ஸ் 360-யுடன் இணைந்திருங்கள்.

சாம்சங் 'கேலக்சி M40': எதிர்பார்க்கப்படும் விலை!

சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், இன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன் விலை பற்றி இன்னும் எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், ஒரு மாதம் முன்பே சாம்சங் இந்தியாவில் மூத்த துணைத் தலைவர் ஆசிம் வார்சி (Asim Warsi), கேட்ஜெட்ஸ் 360-க்கு அளித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 20,000 ரூபாயில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் 'கேலக்சி M40': எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

இந்த சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களுடன் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பை கொண்டுள்ளது. இதன் திரை 6.3-இன்ச் FHD+ திரையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக சாம்சங் இந்தியாவின் ஆசிம் வர்சி, கேட்ஜெட்ஸ் 360-க்கு அளித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மற்ற கேமராக்கள் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தின் மூன்று கேமராக்களில், 32 மெகாபிக்சல் கேமராவுடன் 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் கேமராக்கள் இருக்கும், மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும் என்றவாறான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 

ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படும் இந்த 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரி அளவை கொண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்!
  2. சாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே!
  3. பூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா!
  4. ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா?
  5. செப்டம்பர் 10-ல் அறிமுகமாகிறது 'ஐபோன் 11', iOS 13 புகைப்படங்கள் கூறும் குறிப்பு!
  6. ஜியோ பைபர் திட்டம், விலை, அறிமுக தேதி: தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்!
  7. 48 மெகாபிக்சல் கேமராவுடன் 'ரியல்மீ 5 Pro', ஆகஸ்ட் 20-ல் அறிமுகம்!
  8. ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகிறது 'Mi A3' ஸ்மார்ட்போன், தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
  9. 9,999 ரூபாய்க்கு 3 பின்புற கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது எச்.டி.சி 'வைல்ட்பயர் X'!
  10. ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்துடன் புதிய வாட்ஸ்அப்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.