‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க!

மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் 7,800 ரூபாய் வரை சலுகை உள்ளது.

ஹைலைட்ஸ்
  • நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷனைக் கொடுக்கிறது சாம்சங்
  • கேலக்ஸி M40-க்கு நேரடி தள்ளுபடி கொடுக்கப்படவில்லை
  • ஆனால் M40-க்கு எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட பிற ஆஃபர்கள் உள்ளன

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M20, கேலக்ஸி M10, கேலக்ஸி M30 மற்றும் கேலக்ஸி M40 போன்களுக்கு அமேசான் தளத்தின் மூலம் அதிரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. விலை குறைப்புத் தள்ளுபடியுடன், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வங்கி சார்ந்த தள்ளுபடி, டெலிகாம் சப்ஸ்கிரைபர் சலுகைகளும் உள்ளன. இதில் கேலக்ஸி M40, இந்த மாதத் தொடக்கத்தில்தான் ரிலீஸ் செய்யப்பட்டது. 

சாம்சங் கேலக்ஸி M30 போனுக்கு, 1000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி முன்னர் 14,990 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போன் 13,990 ரூபாய்க்கு விற்கப்படும். 

இந்த போனின் 6ஜிபி + 128ஜிபி வகை, ரூ.17,990-யிலிருந்து ரூ.16,990 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர்களுடன் கூடுதலாக நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷன் கொடுக்கப்படும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் 7,800 ரூபாய் வரை சலுகை உள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 1,500 ரூபாய் வரை உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும். 

சாம்சங் கேலக்ஸி M20 போனுக்கும், 1000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 3ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை முன்னர் 10,990 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது இந்த போன் 9,990 ரூபாய்க்கு விற்கப்படும். 

இந்த ஆஃபருடன் கூடுதலாக நோ காஸ்ட் இ.எம்.ஐ கொடுக்கப்படும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் 7,800 ரூபாய் வரை சலுகை உள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 1,500 ரூபாய் வரை உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும். 

சாம்சங் கேலக்ஸி M20 போனுடன் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி M10 போனுக்கும் 1000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. முன்னர் 8,990 ரூபாய்க்கு விற்கப்பட்ட வந்த இந்த போன் தற்போது, 7990 ரூபாய்க்கு வாங்க முடியும். 

சாம்சங் கேலக்ஸி M40-ஐப் பொறுத்தவரை, தற்போதும் அதன் முன்னர் குறிப்பிட்ட விலையான 19,990 ரூபாய்க்குத்தான் (6ஜிபி ரேம் + 128ஜிபி) விற்கப்பட உள்ளது. அதே நேரத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் 7,800 ரூபாயை தள்ளுபடியைப் பெறலாம். நோ காஸ்ட் இ.எம்.ஐ ஆப்ஷனும் உள்ளது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த போனை வாங்கினால் 1,500 ரூபாய் வரை உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும். 

டெலிகாம் சப்ஸ்கிரைபர்களுக்குக் கொடுக்கப்படும் தள்ளுபடி பிரிவில், ஜியோவின் 198 ரூபாய் மற்றும் 299 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களுக்கு டபுள் டேட்டா கொடுக்கப்படும். வோடாபோன் பயனர்கள் 255 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3750 ரூபாய் கேஷ்-பேக் பெற முடியும். இந்த ஆஃபர் 50 ரீசார்ஜ்களுக்கு 75 ரூபாய் வீதம் கொடுக்கப்படும். மேலும் ஒரு நாளைக்குக் கூடுதலாக 0.5ஜிபி டேட்டாவை 18 மாதங்களுக்குப் பெற முடியும். ஏர்டெல் வாடிக்கையாளர்கள், 10 மாதங்களுக்கு 259 ரூபாய் மற்றும் 349 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டாவைப் பெறலாம். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.