சாம்சங்கின் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன் விலை என்ன விலை தெரியுமா?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
சாம்சங்கின் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன் விலை என்ன விலை தெரியுமா?
ஹைலைட்ஸ்
  • சாம்சங்கின் ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன் விலை 2 மில்லியன் கொரியன் வாங்
  • ஃபோல்டபுள் போன், காலெக்சி X ஆக அடுத்த வருடம் வெளிவரும்
  • போனை மடக்கினால் 4.5 இன்ச் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் இருக்கும்

உலகெங்கிலும் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்கள், ப்ரேக் அசிஸ்ட் எனப்படும் ஃபோல்டபுள் போன் சாம்சங் நிறுவனம் வெளியிடும் என எதிர்ப்பார்த்து உள்ளனர்.

கொரியா நாட்டு நிறுவனமான சாம்சங், தனித்தன்மை கொண்ட ஹார்டுவேர் உபயோகத்தில் ஃபோல்டபுள் போனை தயாரித்து வருகின்றனர். 2 மில்லியன் கொரியன் வான், அதாவது இந்தியா நாட்டு மதிப்பின்படி 1,25,000 ரூபாய் நிர்ணையிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக தெரிவிக்கப்பட்ட தகவலில், 2019 ஆம் ஆண்டும் பாரிலோனாவில் நடைப்பெறும் காலெக்ஸி போன் மாநாட்டில் வெளியிடுவதாக கூறப்பட்டிருந்தது. சாம்சங் நிறுவனத்தின் தலைவர் டிஜே கோ கூறியதாவது, ஃபோல்டபுள் போனில் உண்மையாகவே தனிப்பட்ட ஹார்டுவேர் பயன்பாடு உள்ளது என்று தெரிவித்தார்.

கொரியாவில் உள்ள சந்தை நிபுணர்கள் கூறியது, போன் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நவம்பர் மாதம் தொடங்கும், அதன் பின்னர், செய்முறை ஒருங்கினைக்கும் பணிகள் நடைப்பெற்று விற்பனைக்கு செல்லும். 2 மில்லியன் கொரியன் வான் விலை நிர்ணையிக்கப்பட்டுள்ள நிலையில், சலுகை அளிக்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட விலையில் விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஃபோல்டபுள் ஸ்மார்ட் போன்கள் 7.3 இன்ச் டிஸ்ப்ளேயுடன், உள் வழியும், வெளி வழியும் மடக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாயின.  எனினும், அதுப்போன்ற வடிவத்தில் வெளியாகவில்லை. கோல்டன் ப்ரிட்ஜ் இன்வெஸ்மண்ட்டின் தலைமை ஆராய்ச்சியாளராக இருக்கும் கிம் ஜாங் யியோல், போனை மடக்கினால் 4.5 இன்ச் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் இருக்கும் எனவும்,  ஃபோல்டபுள் போனில், இரண்டு டிஸ்ப்ளே பானெல்களில், ஒன்று வெளியே இருக்கும் என கூறினார்.

ஃபோல்டபுள் போன், காலெக்சி X ஆக அடுத்த வருடம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  எனினும், உலகின் முதல் ஃபோல்டபுள் போன் என்ற அறிமுகத்தை பெற சாம்சங் முயற்சி செய்து வருகிறது. ஆப்பிள், ஹுவாய், மோடோரோலா ஆகிய நிறுவனங்களும் இது போன்ற தொழில்நுட்பம் கொண்ட போனை உருவாக்கி கொண்டுள்ளனர். சாம்சங் வெளியீட்டுக்கு பின்னர் மற்ற நிறுவனங்களின் போன்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.