இப்போது ஐஸ் புளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+!!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இப்போது ஐஸ் புளூ நிறத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+!!

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஐஸ் புளூவின் சீன விலை, சிஎன்ஒய் 5,499.

ஹைலைட்ஸ்
  • கேலக்ஸி எஸ்9 வரிசையில் ஐஸ் புளூ நிறம் புதிய வரவாகும்.
  • சீனாவில் தற்போது முன்பதிவிற்கு தயாரிகியுள்ளது.
  • நவம்பர் 20 ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வரும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9(ரூ.44,799) மற்றும் கேலக்ஸி எஸ்9+(ரூ. 51,900) இரு ஸ்மார்ட்போன்களும் சீனாவில் விற்பனைக்கு வந்து ஒரு மாதகாலம் ஆகும் நிலையில், தற்போது அதில் ஐஸ் புளூ வேரியண்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் முன்னணி ஸ்மார்ட்போன்களில் இரு நிறங்களில் வழவழப்பான பரப்பினைக் கொண்ட போன் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.

ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எஸ்9(ரூ.44,799) போன் பர்கண்டி ரெட், சன் ரைஸ் கோல்டு, டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கின்றன. கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 + ஸ்நாப் டிராகன் 845/எக்சினாஸ்9810, இரட்டை கேமிரா, நல்ல கேமிரா மற்றும் ஏஆர் இமோஜிக்கள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஐஸ் புளூவின் விலை

கேலக்ஸி எஸ்9னில் புதிய ஐஸ் புளூ நிற போன்களின் முன்பதிவு செவ்வாயன்று சீனாவில் துவங்கியுள்ளது. கேலக்ஸி எஸ்9 மாடலின் விலை சிஎன்ஒய் 5,499. கேலக்ஸி எஸ்9+ விலை சிஎன்ஒய் 6,499 ஆகும். இரு போன்களுக்கும் ஒயர் இல்லாத சார்ஜர் கொடுக்கப்படுகிறது.

ஐஸ் புளூ நிற கேலக்ஸி எஸ்9 நவம்பர் 20ல் வெளியாக உள்ளது. கேலக்ஸி எஸ்9+ நவம்.26 ஆம் தேதி விற்பனையா உள்ளது. உலகம் முழுவதும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் விரைவில் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9+ன் முக்கியம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 9னில் 5.8 இன்ச் கியூ ஹெச்டி+ வளைவான அமோல்ட் பேனலுடன் 18:5:9 என்ற வீதத்தில் இருக்கும். கேலக்ஸி எஸ்9+ வளைவான அமோல்ட் பேனலை அதே வீதத்தில் பெற்றுள்ளது. கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ எக்சினாஸ் 9810 SoC தளத்தில் இயங்குகிறது.

கேலக்ஸி எஸ்9+ 6ஜிபி ரேம் மற்றும் 3,500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இரு போன்களின் பின்புறமும் 12 மெகா பிக்சலுடன் பின்புற ஒயிட் அங்கிள் சென்சார் உள்ளது. இருபோன்களின் முன்பக்க கேமிராவும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.