பிலிப்பைன்ஸில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்10-னின் ஸ்பெஷல் தயாரிப்பு!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பிலிப்பைன்ஸில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஸ்10-னின் ஸ்பெஷல் தயாரிப்பு!

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் எனத் தகவல்!

ஹைலைட்ஸ்

12 ஜிபி ரேமுடன் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10

மேலும் சேமிப்பு வசதிக்காக 1 டிபி வரை ஓதிக்கிடு செய்யப்படவுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 போனில் 4 பின்புற கேமராக்கள் உள்ளன

மிகவும் எதிர்பார்கப்பட்ட சாம்சங்கின் அடுத்த படைப்பான சாம்சங் கேலக்ஸி எஸ்10 இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கசிந்துள்ள தகவல்படி இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஒரு ஸ்பெஷல் வசதியும் இருக்கும் எனத் தகவல் வந்துள்ளது.

மேலும் பிலிப்பையின்ஸ் நாட்டில் வெளியாகியுள்ள முன்பதிவு அறிவிப்பின் மூலம் சாம்சங் எஸ்10-னின் ஒரு ஸ்பெஷல் அப்டேட்டை வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரி புக்கிங் அறிவிப்பின் மூலம் இந்த ஸ்பெஷல் வகை போனை பற்றிய தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் சிலரின் கருத்துக்கள்படி பெரிய வளைந்த திரைகள் மற்றும் ப்ரோஃபையில்களுடன் இந்த ‘ஸ்பெஷல்' தயாரிப்புகள் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. பூடகமாக இச்செய்தி வெளியாகியுள்ள நிலையில் ‘ஆப்ஷன் ஏ' ‘ஆப்ஷன் பி' மற்றும் ‘ஆப்ஷன் சி' என மூன்று தேர்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆப்ஷன்களாக சாம்சங் கேலக்ஸி எஸ்10+, சாம்சங் எஸ் 10 மற்றும் சாம்சங் எஸ்10 இ (சாம்சங் எஸ்10 லையிட்) ஆகிய போன்களே உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்பெஷல் எடிஷன் 12ஜிபி ரேம் மற்றும் 1 டிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகும் என்றும் அத்துடன் 6.7 இஞ்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவும் இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5000mAh பேட்டரி பவரும் ஸ்னாப்டிராகன் 885 கொண்டு இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்