ஆகஸ்டில் அறிமுகமாகிறது சாம்சங்கின் 'கேலக்சி நோட் 10'!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஆகஸ்டில் அறிமுகமாகிறது சாம்சங்கின் 'கேலக்சி நோட் 10'!

சாம்சங் நிறுவனம் இந்த கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போன் குறித்து ஒரு டீசரை வெளியிட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • நியூ யார்க்கின் புரூக்ளினில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது
  • இந்த நிகழ்வு இந்திய நேரப்படி ஆகஸ்ட் 8 அதிகாலை 1:30 மணிக்கு துவங்கும்
  • இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,100-1,200 டாலர்கள் வரை இருக்கலாம்

சாம்சங் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்ச்சியை நியூ யார்க்கில் ஏற்பாடு செய்துள்ளது சாம்சங் நிறுவனம். முன்னதாக இந்த நிறுவனம்,வெளியிட்டிருந்த டீசரின்படி இந்த ஸ்மார்ட்போன் 'இன்பினிடி ஓ டிஸ்ப்ளே' திரையை கொன்டிருக்கும் என எதிர்பாரக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனுடன் கேலக்சி நோட் 10+ மற்றும் கேலக்சி நோட் 10 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கேலக்சி நோட் 10 5G மாடலையும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேலக்சி ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு, ஆகஸ்ட் 7 அன்று நடைபெறவுள்ளது. நியூ யார்க்கின் புரூக்ளினுள்ள பார்க்லே மையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.கிழக்கு நேரப்படி (ET) இந்த நிகழ்வு ஆகஸ்ட் 7-ன் மாலை 4 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 8 அதிகாலை 1:30 மணியாகும்.

சாம்சங் நிறுவனம், இந்த நிகழ்வு குறித்த ஒரு அழைப்பை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல, அந்த நிகழ்வில் எந்த தயாரிப்பு அறிமுகமாகப்போகிறது என்பது குறித்து எந்த தகவலும் உறுதியாக கூறப்படவில்லை. இருப்பினும், அந்த அழைப்பை வைத்து பார்க்கையில் சாம்சங் நிறுவனம் தன் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போனைதான் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சாம்சங் நிறுவனம் ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளது. அந்த டீசரை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 'இன்பினிடி ஓ டிஸ்ப்ளே' திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

samsung galaxy note 10 plus youtube techtalktv 1561726624305 samsung

மேலும் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனுடன் கேலக்சி நோட் 10+ மற்றும் கேலக்சி நோட் 10 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட் 10 5G மாடலையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து மேலும் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.28-இன்ச் அளவிலான திரையும், கேலக்சி நோட் 10+ மற்றும் கேலக்சி நோட் 10 Pro ஸ்மார்ட்போன்கள் 6.75-இன்ச் அளவிலான திரையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5G வசதி கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போன் விலை குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி சாம்சங் கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை 1,100-1,200 டாலர்கள் (76,000-82,700 ரூபாய்) வரை இருக்கலாம் என கூறைப்படுகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.